Advertisment

பண்டிகை இல்லாத நாளில் இப்படி ஓபனிங் யாருக்கு சாத்தியம்?

தமிழகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சாதாரணநாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
siva karthikeyan, Siva Karthikeyan doctor movie released, Doctor movie released in normal day, சிவகார்த்திகேயன், டாக்டர் திரைப்படம், சாதாரண நாளில் வெளியான டாக்டர் திரைப்படம், திராவிட ஜீவா, கமர்சியல் கிங் சிவகார்த்திகேயன், Siva Karthikeyan doctor movie receives family audience, tamil cinema news, comercial king siva karthikeyan, siva karthikeyan superhit, Dravida Jeeva

திராவிட ஜீவா, கட்டுரையாளர்

Advertisment

அக்டோபர் 9ம் தேதி வெளியாகி உள்ள கமர்ஷியல் கிங் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமல்ல பெண்கள், குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அஜித், விஜய் போன்றவர்கள் 25 வருடம் ஆனபிறகே தங்களுக்கென ஒரு மார்க்கெட்டை அடைய முடிந்தது. ஆனால், சிவகார்த்திகேயன் மிக குறுகிய காலத்திலேயே அதுவும் கமெர்ஷியல் கிங்காக அனைத்து தரப்பு மக்களையும் தியேட்டருக்கு வரவைத்துள்ளது கடந்த 30,40 வருடங்களில் அறிமுகமான எந்த நடிகருக்குமே சாத்தியமானதில்லை. அதிலும், முன்ணணி நடிகர்கள் என்று சொல்லப்படுகின்ற அஜித், விஜய் போன்றவர்கள் 2015ம் ஆண்டுவரை அதாவது அவர்கள் திரைக்கு வந்து 25 வருடங்களை நெருங்கிய பின்பும் சாதாரண நாளில் படம் வெளியிட்டால் ஓப்பனிங்கையே பெற முடியாத சூழலே இருந்தது. விவேகம், என்னைஅறிந்தால் போன்ற படங்கள் ரிலிசான இரண்டாவது காட்சியிலேயே பி அண்ட் சி சென்டர்களில் ஆளில்லாத நிலைக்கு ஆளானது யாதார்த்தமான உண்மை. அதிலும், ரஜினிக்கு இணையாக பேசப்படும் நடிகர் விஜய் பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாளுக்கு முன்பு அதாவது போகிப் பண்டிகைக்கு தனது பைரவா படத்தை ரிலீஸ் செய்தார்.

அந்த படம் சென்னையின் பிரதான சாலையில் அமைந்துள்ள ஈகா திரையரங்கில் முதல் காட்சியில் அதுவும் முதல்நாளில் 86 பேர் மட்டுமே பார்த்ததாக நாளிதழ்களிலேயே செய்திகள் வந்தன. அதுவும் 2017ல் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவை அனைத்தும் பிரபல ஊடகங்களில் சினிமா விமர்சகர்களாக பேசும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி திரைப்படம் ஜூன் மாதம் ரிலிசானபோதே ஒபனிங்கை பெற்றது. ஆனால், தனுஷ்க்கும் பேமிலி ஆடியன்ஸ் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் படங்களுக்கும் , ஆனால் காக்கிசட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற சிவகார்த்திகேயனின் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய ஒபனிங்கையும் பேமிலி ஆடியன்ஸையும் தியேட்டருக்கு அழைத்து வந்தது மிகப்பெரிய சாதனையே. ஆனால், சோஷியல்மீடியா மாஃபியாக்களாலும் நுனிப்புல் மேயும் விமர்சகர்களாலும் இவை பேசப்படவில்லை.

ரஜினி போன்ற சூப்பர்ஸ்டாருக்கே இப்போதும் இதுபோல் ஓரவஞ்சனை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் மீறி சாதாரண நாளில் தற்போது வெளியாகியிருக்கும் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய ஒபனிங்கை பெற்றுள்ளது என்பது சிவகார்த்திகேயனின் பலத்தை காட்டுகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சரவணா திரையரங்கில் பணிபுரியும் நபர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டதற்கு, அவர் தெரிவித்தது சிவகார்த்திகேயன் ஒரு காமதேனு 80களில் ரஜினி, கமல் படங்களுக்கும் 90களில் ரஜினி,விஜயகாந்த்துக்கும் இருந்த மேக்ஸிமம் கேரண்டி தற்போது ரஜினிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இருப்பதாகவும் தெரிவித்தார். மதுரை அம்பிகா காம்ளக்ஸ் சுந்தரபாண்டி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மீனாட்சி திரையரங்க கேண்டீன் ஊழியர் சங்கர் உள்ளிட்டோரும் இதபோன்ற கருத்துக்களையே எதிரொலித்தனர்.

தமிழகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சாதாரணநாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment