Advertisment

‘வேலைக்காரன்’ டிக்கெட் முன்பதிவு : நாளை தொடங்குகிறது

பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்கூட்டியே புக்கிங் தொடங்கிவிடும். அதன்படி, இந்தப் படத்துக்கான புக்கிங் நாளை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Movie - sivakarthikeyan - velaikkaran

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு, நாளை தொடங்க இருக்கிறது.

Advertisment

சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சதீஷ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘வேலைக்காரன்’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். வருகிற 22ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மொத்தம் 159 நிமிடங்கள் 41 விநாடிகள், அதாவது 2 மணி நேரம் 39 நிமிடங்கள் 41 விநாடிகள் ரன்னிங் டைமைக் கொண்டுள்ளது இந்தப் படம்.

பிரமாண்டமான குப்பம் செட், சூப்பர் ஹிட்டான பாடல்கள், ‘அறம்’ படத்துக்குப் பிறகு ரிலீஸாகும் நயன்தாரா படம், சிவகார்த்திகேயனின் மாஸ் என எல்லாம் சேர்ந்து இந்தப் படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

பொதுவாக, ஒரு படத்தின் ரிலீஸுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்புதான் புக்கிங் தொடங்கும். ஒருசில பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்கூட்டியே புக்கிங் தொடங்கிவிடும். அந்த வரிசையில், இந்தப் படத்துக்கான புக்கிங் நாளை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படமும் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தில், சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment