சிவகார்த்திகேயன் - நயன்தாராவின் எஸ்கே13 படம் குறித்த முக்கிய அப்டேட் இதோ

SK13 First Look Poster : சீமராஜா படத்துக்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் பெயர் இன்று மாலை வெளியாகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனது அதிரடி காமெடி திரைப்படங்களின் மூலம் இடம் பிடித்தவர் இயக்குனர் ராஜேஷ். சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, ALL IN ALL அழகுராஜா போன்ற படங்களின் மூலம் தனது தனி பாணியை வெற்றிய பாதையாக்கி வளம் வருபவர் அவர். தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாராவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

SK13 First Look Poster : எஸ்கே13 ஃபர்ஸ்டு லுக் இன்று ரிலீஸ்

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் . இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரத் தொடங்கிய நாளில் இருந்து நயன் மற்றும் சிவா ரசிகர்கள் போஸ்டர் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களின் கேள்விக்கு சிவாவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவடையும் என்று தெரிவித்திருந்தார்.

அந்த நாள் நெருங்கிவிட்டது. இதுவரை எஸ்கே 13 என்று அழைக்கப்பட்ட இந்த படத்தின் பெயர் மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்களும் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close