எஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்

விசாகப்பட்டினம் - மெட்ராஸ் இடையே ரயிலில் நடந்த  அந்த இசைக் கச்சேரியை எனது வாழ்நாள் முழுவதும் நான் கொண்டாடுவேன்.

விசாகப்பட்டினம் - மெட்ராஸ் இடையே ரயிலில் நடந்த  அந்த இசைக் கச்சேரியை எனது வாழ்நாள் முழுவதும் நான் கொண்டாடுவேன்.

author-image
WebDesk
New Update
எஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்

பிரபல பின்னணி திரைப்பட பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு  உலக மக்கள் அனைவரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், கே. வைதீஸ்வரன் ட்விட்டர் பயனர்  , எஸ்.பி.பாலசுப்ரமணியுடன் ஏற்பட்ட நெருக்கமான உரையாடலை விளக்கியுள்ளார்.

 

 

Advertisment
Advertisements

 

 

 

1972/73 காலகட்டங்களில் இந்த சம்பவம் நடந்தது. எனக்கு  கிட்டத்தட்ட, 10 வயது. எனது தந்தை கரக்பூரில்  ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். ஹவுரா - சென்னை  ரயிலில்  நானும் எனது பெற்றோரும் பயணித்தோம்.  4  படுக்கைகள் கொண்ட, முதல் வகுப்பு பெட்டி. இரண்டு இரவுகள், ரயில் பயணங்களில் கழிக்க வேண்டும்.

அடுத்த நாள், நண்பகல் வாக்கில் ரயில் வால்டேர் ஜே.என் நிலையத்தை அடைந்தது  (இன்றைய  விசாகப்பட்டினம்). ரயில் நிலையத்தில், என் மாமா  குடும்பத்தினர், ஒரு பெரிய கூடையில் மதிய உணவோடு எங்களை  சந்தித்தனர்.

பிளாட்பாரத்தை விட்டு  ரயில் கிளம்பும் தருவாயில், ​​ஒரு இளைஞன் அவசரமாக எங்கள் பெட்டிக்குள் உள்நுழைந்தார். தனது பெர்த்தில் அமர்ந்த பின்பு, அந்த இளைஞன் தன்னை பாலு என்றும், பின்னணி பாடகர் என்றும் அறிமுகப்படுத்தினார்.

அடுத்த நாள், சென்னையில் தமிழ் பாடல் ஒன்றை பதிவு செய்ய உள்ளார். எங்களுடன் மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் அவரை அழைத்தோம். அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.

மதிய உணவிற்குப் பின்பு தான் பல வேடிக்கைகள் தொடங்கியது. தெலுங்கு மற்றும் தமிழில் சில அழகான பாடல்களைப் பாடத் தொடங்கினார். இது போன்ற பாடல்கள் இருப்பது கூட எங்களுக்குத் தெரியாது.  ஆனால், அத்தகைய மெல்லிசையை நாங்கள் கேட்டதில்லை.  இன்றைய எஸ்.பி.பி, இந்த இளைஞர் தான் என்பதை அப்போது நாங்கள் உணரவில்லை

 

விஜயவாடா ரயில் நிலையத்தில், அவரின் நண்பர் வீட்டில் சமைத்த இரவு உணவை அளித்தார். பாலு, அந்த உணவை  எங்களுடன் தாராளமாக பகிர்ந்து கொண்டார். பின்னர், ரயில் நிலையத்தில் விற்ற சில சாக்லேட் பார்களையும் சுவைத்தார்.

இதைக் கண்ட என் பெற்றோர் ஆச்சரியப்பட்டார்கள். "நீங்கள் ஒரு பாடகர். உங்கள் குரல் பாதிக்கப்படவில்லையா?"  என்று அவரிடம் வினவினார்கள்.  அதற்கு, அவர் "ஓ, இல்லை, இல்லை. உண்மையில், இரவில் நன்றாக உறங்க இந்த சாக்கலேட்  எனக்கு உதவுகிறது" என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

 

இரவு உணவிற்குப் பிறகும் கூட, பாடல்கள் தொடர்ந்தன. அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கிஷோர் குமார் பாடல்கள், ஆத்மார்த்தமான ரஃபி பாடல்களையும் பாடிக் காட்டினார். என் அம்மா, அந்த இளைஞருடன் இனைந்து சில டூயட் பாடல்களுடன் சேர்ந்து பாடினார். இது நம்பமுடியாத ஒரு நிகழ்வு. எங்களுக்குள் நடந்த இந்த உன்னதமான கச்சேரி இரவு முழுவதும் நீண்டது.

அடுத்த நாள் அதிகாலையில், ரயில் சென்னை சென்ட்ரலை அடைந்தது. நான், மிகவும் சோகமாக இருந்தேன். எனது, பெற்றாரிடம் கூறிக் கொண்டு விடை பெற்றார். எனது, பெற்றோரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அவர், மிகவும் கம்பீரமாக நடந்தார். நான் அவரை மீண்டும் சந்திக்கவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சென்னைக்கு  குடிபெயர்ந்தேன்.

இப்போது, அவர் ஒரு பிரபலமான பாடகர்  என்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தலைமுறையின் குரலாகவும் வாழ்ந்து வருகிறார். 70-களில்  சென்னையில்  வளர்ந்த என்னைப் போன்ற பள்ளி குழந்தைகளுக்கு, அவரது குரல் மறக்கமுடியாத ஒன்று. எனக்கு, இப்போது 57 வயது. தினமும் நான் வெளியே நடக்கும்போது, ​​அவரது குரல் என்னுடன் வருகிறது.

நம் அனைவருக்கும் சிறந்த எஸ்.பி.பி பாடல்கள் உள்ளன, ஆனால் விசாகப்பட்டினம் - மெட்ராஸ் இடையே ரயிலில் நடந்த  அந்த இசைக் கச்சேரியை எனது வாழ்நாள் முழுவதும் நான் கொண்டாடுவேன்.  இதை, நான் மிகப்பெரிய பாகியமாக கருதுகிறேன்.

Spb

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: