Advertisment

நயன்தாரா ரசிகர்களா நீங்கள்? உங்களுக்கு காத்திருக்கிறது ஒரு ஸ்பெஷல் நியூஸ்

நயன்தாரா ரசிகர்களா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் அனைவரின் உள்ளங்களை மகிழ்ச்சியில் குளிர வைக்க ஒரு புதிய செய்தி வந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

நயன்தாரா என்ற ஒற்றைச்சொல்லுக்குக் குவியும் ரசிகர்கள் மற்றும் பாராட்டுகள் எண்ணற்றது. ஐயா படத்தில் தொடங்கி வேலைக்காரன் வரை  தமிழ் திரையுலகில் இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் அடைந்துள்ளது. ஒரு சில படங்களை நயன்தாராவிற்காகவே பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானோர். இத்தகைய ரசிகர்களுக்கு நாளைப் பெரிய டிரீட் கத்திருக்கிறது.

Advertisment

Imaikka Nodigal Nayanthara : இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா Imaikka Nodigal Nayanthara : இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘இமைக்கா நொடிகள்’ நடிகை நயன்தாரா, நடிகர் அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றம் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

Imaikka Nodigal Audio and Trailer Release Imaikka Nodigal Audio and Trailer Release : இமைக்கா நொடிகள் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நாளை வெளியீடு

இமைக்கா நொடிகள் படத்திற்கு இசையமைத்துள்ளார், ஹிப் ஹாப் தமிழா ஆதி. குறிப்பாகப் படத்தின் வசனங்கள் அனைத்திற்கும் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை பிரபாகர். இந்தப் படத்தின் இறுதி காட்சிகள் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழு.

கேமியோ ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. அதாவது நாளை (27ம் தேதி) இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நயன்தாரா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பாடல் மற்றும் டிரைலருக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment