Advertisment

பிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்... கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்... ஏன்?

Sridevi Bungalow teaser : சர்ச்சையில் சிக்கிய பிரியா வாரியர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sridevi Bungalow teaser

Sridevi Bungalow teaser

Sridevi Bungalow teaser : பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் டீசரில் ஸ்ரீதேவி மரணமடைந்த குளியல் தொட்டியைக் காட்சிப்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ்பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து தொடர்ந்து ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிரியா வாரியர் தினம் ஏதோ ஒரு வகையில் பேசப்பட்டு வருகிறார்.

Sridevi Bungalow teaser : ஸ்ரீதேவி பங்களா டீசர்

இந்நிலையில் மலையாள இயக்குநர் பிரசாந்த் மாம்பூலி இயக்கியிருக்கும் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்தப் படம் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த டிரைலரில் பிரியா வாரியர் கிளாமராக தோன்றுகிறார்.

இந்தப்படம் ஸ்ரீதேவியின் ஆடம்பர வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தெரிகிறது. இறுதியில் ஸ்ரீதேவி மரணமடைந்த குளியல் தொட்டியையும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளால் போனி கபூர் கடும் கோபத்தில் இருக்கிறார். மேலும் இது குறித்து படத்தின் இயக்குநருக்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது பற்றி இப்படத்தின் இயக்குநர் பேசும்போது, “போனி கபூரிடம் இருந்து எனக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. ஆனால் அதை நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

யார் வேண்டுமானாலும் ஸ்ரீதேவி என்ற பெயர் வைத்திருக்கலாம். என் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஸ்ரீதேவி எனப் பெயர், அந்த கதாபாத்திரமும் ஒரு நடிகை. அதற்கு நான் என்ன செய்வது? படம் குறித்து இதற்கு மேல் நான் பேச தயாராக இல்லை. எதுவாக இருந்தாலும், நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

Tamil Cinema Sridevi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment