ரூ. 240 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நடந்த திட்டமிட்ட கொலை தான் ஸ்ரீதேவியின் மரணமா?? வெளிவரும் பகீர் தகவல்கள்!!

வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு

நடிகை ஸ்ரீதேவி  ரூ. 240 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக  திட்டமிட்டு கொல்லப்பட்டு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இன்று வரை  முடியாத ஒரு மர்மமாகவே நீடித்து வருகிறது.   துபாயில்  திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள சென்றிருந்த நடிகை  ஸ்ரீதேவி குளியலறையில் இறந்த கிடந்தார்.

அவரின் இறப்பு  திரையுலகத்தினரை  சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் பிரேத பரிசோதனையில்  குளிப்பதற்கு முன்பு ஸ்ரீதேவி  மது அருந்தி இருந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், ஸ்ரீதேயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரபல இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று  சுனில்  தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு பகீர் கிளப்பினர்.

இதுக் குறித்து அவர் வாதிட்டது, “ நடிகை ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி ரூபாய்க்கு ஓமன் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் மரணமடைந்தால் மட்டுமே இந்த பாலிசி தொகை கிடைக்கும். இந்த நிலையில் துபாயில் அவர் மரணமடைந்துள்ளார். எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது” என்று தெரிவித்தார்,

ஆனால், இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், ரூ, 240 கோடி இன்சூரன்ஸ் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் பாலிசியை பெருவதற்காக ஸ்ரீதேவியின் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கேள்வியும் தற்போது அனைவரிடம் எழ தொடங்கியுள்ளது.  இந்நிலையில் தான் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தி வரும் வேத் பூஷன் என்கிற முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் ஸ்ரீதேவி விவகாரம் தொடர்பாக சில விசாரணைகளை மேற்கொண்டு, சமீபத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக அவர் கூறியிருப்பது, “ ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளது.  ஸ்ரீதேவியை யாரோ வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு, பிறகு தடயேமே இல்லாமல் செய்துள்ளனர். நான் சமீபத்தில்  ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று இதுதொடர்பான விசாரணையை  மேற்கொண்டேன்

.அவர் தங்கியிருந்த அறைக்கு பக்கத்தில் இருந்தவர்களிடமும் இதுக் குறித்து விசாரித்தேன். அதே சமயம்  துபாய் காவல் துறையை நான் மதிக்கிறேன்.   ரூ. 240 கோடி இன்சூரன்ஸ் பணம் தான் பெருத்த சந்தேகங்களை எழ வைக்கிறது”: என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியின் மரணம்   தொடர்பான  பகீர் தவல்கள் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கபூர் குடும்பத்தில்  பதற்மான சூழ்நிலை நிலவி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close