ஸ்ரீதேவியின் கடைசி பிறந்த நாள் வீடியோ: கண்ணீருடன் பகிர்ந்த கணவர் போனி கபூர்!

ஸ்ரீதேவி தனது கணவருக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீதேவி கடைசி பிறந்த நாள்  : நடிகை ஸ்ரீதேவி  தனது கணவருடன்  கடைசி பிறந்த நாஐ கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்ரீதேவியின் கடைசி பிறந்த நாள் வீடியோ:

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இன்று வரை  திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணமாகவே பார்க்கப்படுகிறது. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றிருந்த ஸ்ரீதேவி, ஹோட்டலின் குளியலறையில் இறந்து கிடந்தார்.

தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நம்பர்1 கதாநாயகியாக வலம் வந்தார்  நடிகை ஸ்ரீதேவி. எம் ஜி ஆர் முதல் விஜய் வரை அனைத்து தலைமுறையினருடனும் நடித்த பெருமையும் இவருக்கு மட்டுமே.

ஸ்ரீதேவியின் இறப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லை அவரின் குடும்பத்தாருக்கும்  ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பு.  தொழிலதிபர் போனி கபூரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீதேவிக்கு  ஜான்வி, குஷி என்று இரண்டு பெண் பிள்ளைகள்.

ஸ்ரீதேவியின் மரணம், அவர்களின் குடும்பத்தாருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.   அவரின் மூத்த மகள் ஜான்வியின் அறிமுக படமான தடாக் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கூட ஸ்ரீதேவிக்கு கிடைக்கவில்லை.

தடாக் படத்தில்  தான் ஜான்வி அறிமுகம் ஆக வேண்டும் என்று உறுதியாக ஸ்ரீதேவி கடைசியில் மகளின் முதல் படம் வெளியாவதற்குள்  உலகை விட்டு சென்றார்.   இந்நிலையில் இன்று ஸ்ரீதேவியின்  55 ஆவது பிறந்த நாள் ஆகும்.

அவரின் பிரிவை நினைத்து வாடும்  அவரது கணவர் போனி கபூர், சென்ற வருடன் ஸ்ரீதேவி கொண்டாடிய பிறந்த நாள் வீடியோவை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். சென்ற வருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஸ்ரீதேவி தனது கணவருக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close