Advertisment

அமெரிக்க நிறுவன தயாரிப்பான ‘ட்ரெட்ஸ்டோனில்’ ஸ்ருதி ஹாசன்!

ட்ரெட்ஸ்டோன் சீரியலை பென் ஸ்மித் தயாரிக்கிறார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
happy birthday shruti haasan

happy birthday shruti haasan

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதல் முறிவிற்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

நடிகை ஸ்ருதி ஹாசனும் லண்டனைச் சேர்ந்த தியேட்டர் கலைஞர் மைக்கேல் கார்சேலும் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சென்னை, மும்பை மற்றும் லண்டனில் ஜோடியாக வலம் வந்தனர். இதற்கிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதியும், மைக்கேலும் பிரிந்து விட்டனர்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த ஸ்ருதி ஹாசன், காதலருடன் ஏற்பட்ட முறிவிற்குப் பிறகு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது, யூ.எஸ்.ஏ நெட்வொர்க்கின் ‘ட்ரெட்ஸ்டோன்’ சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் டெல்லியைச் சேர்ந்த நிரா படேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். ட்ரெட்ஸ்டோன் சீரியலை பென் ஸ்மித் தயாரிக்கிறார்.

இதில் ஸ்ருதியை தவிர, மைக்கேல் ஃபோர்ப்ஸ், பாட்ரிக் ஃபுஜித், மைக்கேல் கேஸ்டன், டெஸ் ஹெளப்ரிச் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

Tamil Cinema Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment