சிம்புவை ரசிகர்கள் வெறித்தனமாக விரும்ப இதுதான் காரணமா?

சில நிமிடங்கள் மவுன அஞ்சலில் செலுத்துப்படி எல்லோரிடம் கேட்டுக் கொண்டார்.

உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங்கை விட, குழந்தை நட்சத்திரத்தின் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்குமா? என்றால் அது சிம்புவின் வாழ்வில் சாத்தியமே. லிஸ்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து, தனது பேச்சாலும், நடனத்தாலும், துருதுருப்பாலும் ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய சைஸ் நாற்காலியியை போட்டு அமர்ந்தவர் தான் நடிகர் சிம்பு.

தந்தையை போல் சிம்புவை சுற்றியும் ஏகப்பட்ட விமர்சனங்கள்,கருத்துக்கள், வதந்திகள், சர்ச்சைகள். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. காதல் தோல்வி, பட தோல்வி, தயாரிப்பாளர்களின் புகார்கள் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த சிம்பு ஒரு போதும் ஊடகங்களை எதிர் நோக்க பயந்ததில்லை.

எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டாலும் அதற்கு தைரியமாகவே பதில் அளிப்பார். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, காவிரி பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என எல்லா அரசியல் சார்ந்த பொதுமக்களின் பிரச்சனைகளுக்கும் சிம்பு குரல் கொடுத்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு, ஆதரவு இரண்டும் சமமாகவே எழுந்தது.

இந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரலை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சிம்பு நெகிழ்சியான தருணங்களால் கண்விட்டு கலங்கி அழுதார். நிகழ்ச்சியில் நடந்த சிறப்பு தருணங்கள் தொகுப்பாக உங்கள் பார்வைக்கு…

சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கப்பட்ட சிம்பு, முதலில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் படி, சில நிமிடங்கள் மவுன அஞ்சலில் செலுத்துப்படி எல்லோரிடம் கேட்டுக் கொண்டார்.

பின்பு, 5 வயதில் இருந்து தனது தீவிர ரசிகையாக இருக்கும் சிறுமி ஒருவரை பற்றி சிம்பு பகிர்ந்துக் கொண்ட சம்பவம் அரங்கத்தில் இருந்த அனைவரையும் அழ வைத்தது.வாய் பேச முடியாத அந்த சிறுமி சிம்புவிடம் தனது அன்பை வெளிப்படுத்தியது மீண்டும் உங்கள் பார்வைக்கு..

நன்றி : ஜீ தமிழ்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close