வரி ஏய்ப்பு விவகாரம்: ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்

கடந்த 2007-2008 மற்றும் 2008 -2009 ஆகிய இரண்டு நிதியாண்டில் தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறைக்கு தெரிய வந்தது.

Studio Green K.E.Gnanavel: வருமான வரித்துறை தொடர்ந்த வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா-வுக்கு பிடி வரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, சூர்யா, கார்த்தி உள்பட பல முன்னணி நடிகர்களை கொண்டு ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். இவர் கடந்த 2007-2008 மற்றும் 2008 -2009 ஆகிய இரண்டு நிதியாண்டில் தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறைக்கு தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ஞானவேல்ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்கள் மூலம் ஞானவேல்ராஜா தனது வருமானத்தை மறைத்து வருமான வரி தாக்கல் செய்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார். தற்போது குற்றச்சாட்டு பதிவுக்காக இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீலும் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close