காதலுக்கு மதம் தடையில்லை : பெற்றோரை உதறிவிட்டு காதலனைக் கரம்பிடித்த வி.ஜே. மணிமேகலை

திருமண புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மணிமேகலை, ‘காதலுக்கு மதம் தடையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரை வாழ்த்தி பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை, இன்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

சன் மியூஸிக் சேனலில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளராக இருக்கிறார் மணிமேகலை. தற்போது ‘ஃப்ரீயா விடு’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவரும், சினிமாவில் டான்ஸராக இருக்கும் ஹுசேன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மணிமேகலையில் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பெற்றோரை உதறிவிட்டு காதலன் ஹுசேனை இன்று கரம்பிடித்துள்ளார் மணிமேகலை. இவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மணிமேகலை, ‘காதலுக்கு மதம் தடையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரை வாழ்த்தி பலர் கமெண்ட் செய்துள்ள நிலையில், பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததை எதிர்த்தும் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

×Close
×Close