23 கிலோ எடை குறைத்து ஸ்லிம் ஆன சன் டிவி நடிகை; வைரல் வீடியோ

Sun TV actress Krithika weight loss video goes viral: 23 கிலோ எடைகுறைத்து ஸ்லிம் ஆனதை வீடியோவாக வெளியிட்டுள்ள பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை; வைரல் வீடியோ…

சன் டிவி பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை கிருத்திகா 23 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

கிருத்திகா, 2001 இல் 10ஆம் வகுப்பு படிக்கும்போது ஆண்டான் அடிமை என்ற படத்தில் சத்தியாராஜ் தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். அடுத்து பேசாத கண்ணும் பேசுமே படத்தில் குணாலின் தங்கையாக நடித்தார். பிறகு கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் சின்னத்திரையில் அறிமுகமானார்.

சன் டிவியின் மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் கிருத்திகா. பின்னர் ராதிகா நடித்த செல்லமே சீரியலில் கோமதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் ஆனந்தம், முந்தானை முடிச்சு, மரகத வீணை, கல்யாண பரிசு, பாசமலர் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்தார்.

விஜய் டிவியில் சின்னதம்பி, கலைஞர் டிவியில் ரேகா ஐபிஎஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். மானாட மயிலாட மற்றும் ஜோடி நிகழ்ச்சியிலும் போட்டியளராக கலந்துக் கொண்டுள்ளார். 15 வயதில் சின்னத்திரையில் அறிமுகமானவர் தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் கிருத்திகா தன்னுடைய உடல் எடையை 86 கிலோவிலிருந்து 63 கிலோவாக குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். 2012 முதல் 2021 வரை தனது உடல் எடை குறைந்தது குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை கிருத்திகா வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv actress krithika weight loss video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com