Sun TV Serial: மெட்டிஒலி சீரியலில் ஐந்து பெண்கள் என்று ஆரம்பித்து அவர்களுக்கான கதையை பிரித்து, பிரித்து கையாண்டதால் தான் சீரியல் சூப்பர் ஹிட் ஆனது. வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருந்தாலே குடும்பம் ஜாலியாக இருக்கும். அதிலும் ஐந்து பெண்கள், அவர்களை வளர்த்த விதம் என்று கதை போகும் போது, பார்க்க பார்க்க மக்களுக்கு பிடித்து போனதால் தான் இந்த சீரியல் அந்த காலத்தில் சூப்பர் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது.
ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் – தமிழக முதல்வரிடம் மருத்துவர்கள் பரிந்துரை!
அப்பா பேச்சை வேதவாக்காக எடுத்துக்கொண்டு வளரும் இந்த ஐந்து பெண்களின் வழ்க்கை ஏன் சரியாக அமையவில்லை என்று பார்க்க பார்க்க பார்ப்பவர்களுக்கும் கேள்வி எழும்.
முதல் பெண் தனம் அப்பாவியாக இருப்பது, சரோ மாணிக்கத்தை திருமணம் செய்துக்கொண்டு கஷ்டப்படுவது, லீலா மாணிக்கத்தின் தம்பி செல்வத்தை காதலித்து, அந்த காதல் கை கூடாமல், சந்தேகப் பிராணி ஒருவன் கையில் சிக்கி தத்தளிப்பது என்று மெட்டிஒலி பல கதைகளை சொன்னது. சிதம்பரம் கொஞ்சம் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு வாழ்ந்திருந்தால் ஒருவேளை அவர் பெற்ற ஐந்து பெண்களின் வாழ்க்கையும், நன்றாக இருந்திருக்குமோ என்கிற எண்ணம் வந்தாலும், ஒரு மிடில்கிளாஸ் தகப்பன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சமாதானமும் எழாமல் இல்லை.
16ம் நூற்றாண்டு முதல் 2020 வரை மருத்துவ முகக் கவசங்களின் பரிணாமம்! N95-ன் வரலாறு
மெட்டிஒலி சீரியலில் மாணிக்கம், அடுத்தவர் மனைவியுடன் உறவு வைத்து இருப்பதை ஆரம்ப எபிசோடிலேயே காண்பித்து இருந்தாலும் எப்படி இந்த சீரியலை மறுக்காமல் மக்கள் பார்த்து ஆதரவு அளித்தார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால், அதற்குக் காரணம் இந்த ஐந்து பெண்கள் தான். அவர்கள் வளர்ந்த விதத்தைப் பார்க்க, மக்கள் தொடர்ந்து இந்த சீரியலுக்கு ஆதரவு அளித்து இருப்பார்கள் என்று புரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Sun tv metti oli serial dhanam saro leela 90s kids
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!