Advertisment

'ஹாய் மக்களே..!' சன் சீரியலில் ரீ என்ட்ரி ஆகும் செம்பருத்தி சீரியல் நடிகை

Sun Tv new serial thalattu actress bharatha naidu re-entry: தாலாட்டு சீரியல் மூலம் மீண்டும் சன் டிவியில் நடிக்க வருகிறார் பரதா நாயுடு. இந்த தாலாட்டு சீரியலில் பரதா நாயுடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

author-image
WebDesk
New Update
'ஹாய் மக்களே..!' சன் சீரியலில் ரீ என்ட்ரி ஆகும் செம்பருத்தி சீரியல் நடிகை

சன் டிவியில் நேற்று திங்கட்கிழமை முதல் தாலாட்டு என்ற புதிய சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் ‘தெய்வமகள்’ சீரியல் புகழ் கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ராஜ் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியலின் கதை தாய்ப்பாசத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும் என்று ப்ரோமோ விடியோவை பார்க்கும் போது தெரிகிறது.

Advertisment

இந்த சீரியல் மூலம் மீண்டும் சன் டிவியில் நடிக்க வருகிறார் பரதா நாயுடு. இந்த தாலாட்டு சீரியலில் பரதா நாயுடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பரதா நாயுடு இதற்கு முன்பு, செம்பருத்தி சீரியலில் மித்ரா என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் குடும்பங்களுக்கு அறிமுகமானவர்.

தாலாட்டு சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு ரீ-எண்ட்ரி கொடுக்கும் பரதா நாயுடு அந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.



அந்த வீடியோவில், “ஹாய் மக்களே!, நான் பரதா நாயுடு பேசுறேன், மறக்காம இன்னைக்கு மதியம் 2.30 மணிக்கு சன் டிவி பார்க்க ரெடியா இருங்க, நான் திரும்பவும் தமிழில் நடிக்கவுள்ள சீரியல் தாலாட்டு ஒளிபரப்பாக உள்ளது. எனக்கு உங்களுடைய ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் வேணும். திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30 மணிக்கு தாலாட்டு சீரியல் ஒளிப்பரப்பாகுது எல்லாரும் மறக்காம பாருங்க” என அவர் பேசியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக, கடந்த வாரமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலாட்டு சீரியலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு சந்தோஷமான அறிவிப்பு, நான் நடிக்கும் தாலாட்டு சீரியல் வரும் திங்கள்  மதியம் 2.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுது எல்லாரும் மறக்காம பாருங்க, என பரதா நாயுடு பதிவிட்டிருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv New Serial Thalattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment