Advertisment

ரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்

Sun TV Roja serial actor change new ashwin is Sankaresh: ரோஜா சீரியல் புதிய அஷ்வினாக நடிக்கிறார், கோகுலத்தில் சீதை சீரியல் நடிகர் சங்கரேஷ்

author-image
WebDesk
New Update
ரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்

ரோஜா சீரியல் அஷ்வினாக நடிக்க வருகிறார், மற்றொரு சன் டிவி நடிகரான சங்கரேஷ்.

Advertisment

சன் டிவி சீரியல்களில் தமிழ் ரசிகர்களிடையே நல்ல பிரபலம். சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சன் டிவி சீரியல்களிலே டாப்பில் உள்ளது ரோஜா சீரியல் தான். அவ்வப்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் ரோஜா சீரியல் முதலிடம் பிடித்து வருகிறது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு சரியான போட்டியாக இருந்து வருவது ரோஜா சீரியல் தான்.

இந்த சீரியல் ப்ரியங்கா, சிப்பு சூர்யன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் அஷ்வின் என்ற கதாப்பாத்திரத்தில் இதுவரை வெங்கட் ரெங்கநாதன் என்பவர் நடித்து வந்தார். இவர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வெங்கட் திடீரென ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். ஆனால் விலகுவதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.

publive-image

தற்போது அவருக்கு மாற்றாக அஷ்வின் கதாப்பாத்திரத்தில், சங்கரேஷ் குமார் நடித்து வருகிறார். இவர் சன் டிவியின் வானத்தைப் போல, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment