/tamil-ie/media/media_files/uploads/2021/04/roja-serial.jpg)
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பராகி வரும் சீரியல் ‘ரோஜா’. இதில் பிரியங்கா, ஷாம்லி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனாதை இல்லத்தில் வரும் ரோஜா அவளுடைய உண்மையான தந்தையை சந்தித்தபோதும் இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியாமல் இருக்கின்றனர். இதில் ரோஜா தனது தந்தையுடன் சேர்வாரா என்ற கேள்வியுடன் கதை செல்கிறது. அதில் இன்றைய எபிசோடில்,
அர்ஜுனிடம் சந்திரகாந்தா, பையா கணேஷ் கொலை கேஸில் உங்க அம்மா சொன்னது நிச்சயம் நடந்தாகனும், அதுவும் அனுவ அவங்க வீட்ட விட்டு விரட்டுறதுக்கும், எந்த தடையும் இல்லாம தண்டிக்கிறதுக்கும் சரியா இருக்கும் என்கிறாள். அதற்கு அர்ஜீன், ரோஜாவா செண்பகம் பெத்த பொண்ணுனு எப்படியாவது நிரூபிச்சாகனும். வர்ற பிறந்தநாளுக்குள்ளே செய்றேனு சவால் விட்ருக்கேன் என சொல்கிறான். அப்போது சந்திரகாந்தா, உங்களுடைய சாவல் என்னுடைய சவால் மாதிரி, உங்களுக்காகவும் ரோஜாவுக்காகவும் நான் இதை பண்றேன் என சொல்கிறாள்.
ரோஜாவுக்கு எல்லாமுமாக நான் இருந்தாலும் பெத்தவங்க பாசம் அவளுக்கு வேணும் என்று அர்ஜூன் சொல்றான். ரோஜா, செண்பகம் டைகர் மாணிக்கத்தோட புள்ளனு நிரூபிக்க என்னால முடிஞ்சத செய்றேன். அதுக்கு நாம ஜெயில்ல இருக்குற சாந்த மூர்த்தியை சந்திக்கணும் என சந்திரகாந்தா சொல்கிறாள். இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மறைந்திருந்து கேட்கும் சாக்ஷியின் ஆட்கள் அவளிடம் போன் பண்ணி, நடந்ததை சொல்கின்றனர். அதுக்கு சாக்ஷி அவுங்களுக்கு முன்னாடி நீங்க போய் சாந்த மூர்த்தியை பாருங்க, அவங்களோட எல்லா நடவடிக்கையும் எனக்கு தெரிஞ்சாகணும், என சொல்கிறாள்.
இங்கு அனு தன் கையில் இருக்கும் காப்பை பார்த்து பெருமைகொள்கிறாள். இதைப்பார்த்து அர்ஜுன், ரோஜாவிடம் இருந்த காப்பு எப்படி அனு கைக்கு போச்சு என கேட்கிறான். கல்பனா நடந்ததை எல்லாம் சொல்கிறாள். இதை கேட்கும் அர்ஜுன், உன்னோட உரிமையை பறிச்சு இருக்காங்க என கோபமாகி சண்டையிட செல்கிறான். ரோஜாவும் கல்பனாவும் அவனை தடுக்கிறார்கள். அப்போது கல்பனா, ரோஜா செண்பகத்தோட பொண்ணுன்னு நிரூபிக்கிறது தான் முக்கியம் என சொல்லி அர்ஜூனை அமைதியாக்குகிறாள்.
அடுத்தாக அனு கையில் போட்டிருக்கும் காப்பை அன்னப்பூரணியிடம் காட்டுகிறாள். அன்னப்பூரணி, காப்பு உன் கைக்கு பொருத்தமாக இருப்பதாகவும் இந்த காப்புக்கே உன் கையில் இருப்பதுதான் பெருமை என சொல்கிறாள். அப்போது அனு, என் பிறந்தநாள நிம்மதியா கொண்டாட முடியுமானு தெரியலை என சொல்கிறாள். அதுக்கு அர்ஜூனும் ரோஜாவும் நிகழ்ச்சிக்கு வரமாட்டாங்க எனச் சொல்லும் அன்னபூரணியிடம் ரோஜாவை அவமானப்படுத்த ஐடியா ஒன்றை சொல்கிறாள். இந்த டூப்ளிகேட் தங்க நெக்லஸை நீங்கள் ரோஜாவிடம் கொடுத்து பிறந்தநாள் ஃபங்ஷனுக்கு போட்டு வரச்சொல்லுங்க, அப்படி அவள் இந்த நகையை போட்டு பர்த்டே பங்ஷனுக்கு வரும்போது, அவ மேல திருட்டு பட்டம் கட்டி வெளிய அனுப்பிருவோம் என சொல்கிறாள் அனு.
அதன்பிறகு யசோதாவை விட்டு ரோஜாவை கூப்பிட்டு அனுப்புகிறாள் அன்னப்பூரணி. அப்போது அங்கு வரும் ரோஜாவிடம், உன் கைல இருந்த காப்பை கழட்டி, என் பேத்தி கைல மாட்டிவிட்டது எனக்கு ஒரு மாதிரி இருக்கு, அதனால இந்த நெக்லஸ போட்டுக்க என ரோஜாவுக்கு மாட்டி விடுகிறாள் அன்னப்பூரணி.
அப்போது கல்பனா சந்தேகத்துடன் நீங்க இதெல்லாம் பண்றது நம்ப முடியலை என சொல்கிறாள். அதற்கு அன்னபூரனி 'இவ நம்ம வீட்டு வாரிசுன்னு நீ சொல்ற, அர்ஜுனும் அதை நிரூபிக்கிறேன்னு சொல்றான். அதான் இந்த பொண்ணு மேல கோபம் வேற ஒன்னும் இல்லை' என சமாளித்தவாறு ரோஜாவிடம், அனு பர்த்டே பங்ஷனுக்கு வந்தா நீ இந்த நகையை போட்டு வா என சொல்கிறாள். மேலும் தான் நகை கொடுத்த விஷயத்தை பற்றி இப்போதைக்கு அர்ஜுனிடம் சொல்ல வேண்டாம் என்றும் சொல்கிறாள். ரோஜாவும் அதற்கு சம்மதிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.