Advertisment

குஷ்பு சீரியலுக்கு 'நோ' சொன்ன சன் டிவி?

குஷ்புவின் நந்தினி சீரியலை ஒளிபரப்ப ஜீ தமிழ் சந்தோஷத்துடன் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனால், நந்தினி 2 சீரியல் இனிமேல் ஜீ தமிழ் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sun tv, sun tv no for kushbu nandhini 2 serial, nandhini 2, குஷ்பு, நந்தினி 2 சீரியல், சன் டிவி, ஜீ தமிழ், nandhini 2 serial, zee tamil will broadcast, kushbu serila, kushbu, kushboo, zee tamil tv

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள நந்தினி 2 சீரியலை ஒளிபரப்ப சன் டிவி மறுப்பு தெரிவித்ததால் அந்த சீரியல் ஜீ தமிழ் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

நாகங்கள் மனிதர்களாக உருமாறும் பிரமிப்பான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. நந்தினி சீரியலை நடிகை குஷ்பு தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலம் தாயாரித்தார். நந்தினி சீரியலுக்கு குஷ்புவின் கணவர் சுந்தர் சி கதை எழுதியிருந்தார். விருவிருபான இந்த சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வெற்றி பெற்றது.

அதனால், நடிகை குஷ்பு நந்தினி சீரியலின் 2வது பாகத்தை தயாரித்துள்ளார். நந்தினி 2வது பாகம் சீரியல் 50 எபிசோடுகளுக்கு மேல் தயாராக உள்ள நிலையில், குஷ்புவின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக சன் டிவி அந்த சீரியலை ஒளிபரப்ப மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகை குஷ்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜகவின் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த சூழலில்தான் அவருடைய நந்தினி சீரியல் 2வது பாகத்தை சன் டிவி ஒளிபரப்ப மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குஷ்பு தரப்பு நந்தினி 2 சீரியலை ஒளிபரப்ப ஜீ தமிழ் தொலைக்காட்சியை அணுகியுள்ளனர். அவர்கள் குஷ்புவின் நந்தினி சீரியலை ஒளிபரப்ப ஜீ தமிழ் சந்தோஷத்துடன் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனால், நந்தினி 2 சீரியல் இனிமேல் ஜீ தமிழ் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Sun Tv Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment