சன் டிவி சீரியல் நடிகைக்கு வளைகாப்பு: பூரிப்பில் தம்பதியர்

Sun TV actors jai dhanush and keerthi will be mom and dad soon: கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நாங்கள் விரைவில் அம்மா அப்பா ஆகப் போகிறோம் என்பதை இந்த நல்ல நாளில் எல்லோருக்கும் தெரிவிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் அதிக நாட்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள சீரியல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரலேகா. இதில் சஞ்சய் பரந்தாமன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் ஜெய் தனுஷ். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஜெய் தனுஷ், சீரியல் நடிகை கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை கீர்த்தி சுந்தர்.சி கதையில் வெளியான நந்தினி சீரியலில் மாயா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிப்பரப்பானது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை கீர்த்தி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நாங்கள் விரைவில் அம்மா அப்பா ஆகப் போகிறோம் என்பதை இந்த நல்ல நாளில் எல்லோருக்கும் தெரிவிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார். தற்போது கீர்த்திக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் ஜெய் தனுஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv serial actors jai dhanush keerthi soon mom and dad

Next Story
Tamil TV Serial: பாக்யா வீட்டில் மயூ; ராதிகா வீட்டில் கோபி!Vijay TV, baakiyalakshmi serial, baakiyalakshmi, விஜய் டிவி, பாக்யலட்சுமி சீரியல், பாக்யலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு, கோபி, மயூ, ராதிகா, எழில் அமிர்தா, vijay tv serial, tamil tv serial, baakiyalakshmi, gopi, mayu, radhika, amirtha, ezhil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com