’வில்லி கூட்டம் ஒண்ணு கூடிடுச்சே’: இது அழகா? இல்ல அழுக்கா?

சட்டப்படி ரெண்டாவது கல்யாணம் செல்லாது என்று கூட சுதாவை பேச வைக்காமல் இயக்குநர் விட்டு இருப்பதன் மர்மம் தெரியவில்லை.

Azhagu Serial, Sudha Poorna Mallika
Azhagu Serial, Sudha Poorna Mallika

Sun TV Serial : அழகு சீரியலில் பழனிச்சாமி வாத்தியாரின் ரெண்டாவது சம்சாரம் என்று சொல்லிக்கொண்டு மல்லிகா உள்ளே நுழைகிறார். குடும்பத்தில் எல்லாரையும் ஆட்டி வைக்கிறாள் இந்த மல்லிகா. இவளுடன் கூடவே சித்தின்னு சொல்லிகிட்டு ஒருத்தர் வர்றாங்க… அவங்களும் வில்லி வேலைத்தான் செய்துகொண்டு இருக்காங்க. இத்துடன் இன்னொன்று என்று சுதாவின் முதல் புருஷன் மாமியாரையும் அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் ஒரு குட்டி வில்லி ராஜ்ஜியமே நடத்தி வருகிறாள் மல்லிகா.

நாம் இருவர் நமக்கு இருவர்: பல்லியால மாயனுக்கு அடிச்ச லக்!

அழகு சீரியலில் இவ்வளவு கூட்டத்திலும் ரேவதி இல்லாமல் போனது சீரியலில் அவ்வப்போது நடப்பது தான். ஏற்கனவே கொலை காண்டில் ரசிகர்கள் அழகு சீரியலைப் பார்த்து வருகிறார்கள். இந்த நேரத்தில் ரேவதியும் சீரியல் இல்லாமல் எஸ்ஸாகி இருப்பது.. இது அழகு சீரியல் சீசன் 2 வா என்று எண்ணும் அளவுக்கு வேறு கோணத்தில் பயணித்து வருகிறது.ஒரு வில்லி என்றாலே பாவம் மக்கள் டென்ஷனாகி விடுவார்கள். அழகு சீரியலில் வில்லிகள் கூட்டமாக வந்து இறங்கி இருக்கிறார்கள்..

சுவாரஸ்யமா எப்படி சீரியல் பார்ப்பது… மல்லிகா உயிலை தயார் செய்துக்கொண்டு சொத்தில் எனக்கு பங்கு வேண்டும் என்று நிற்கிறாள். வக்கீலையும் அழைத்துக்கொண்டு வந்து சொத்தை பிரிக்க பேச்சு நடக்கிறது. பழனிச்சாமி வாத்தியார் பேச முடியாமல் நிற்க, ரவி, மகேஷ். திருநா மூவரும் துள்ளிக்கொண்டு நிற்கிறார்கள். சுதா அந்த உயிலை வாங்கிப் பார்த்துட்டு ஒண்ணுமே பேசாமல் கிழிச்சு போடுகிறாள். சட்டப்படி ரெண்டாவது கல்யாணம் செல்லாது என்று கூட சுதாவை பேச வைக்காமல் இயக்குநர் விட்டு இருப்பதன் மர்மம் தெரியவில்லை.

அடடே ஹன்சிகா, கலர்ஃபுல் பிந்து மாதவி: முழு படத் தொகுப்பு

மல்லிகா தனது ஆட்டத்தை அழகம்மை வீட்டில் ஆரம்பிச்சு ஒரு மாதம் ஆகப் போகிறது. இப்போதுதான் மகேஷ் தனது அண்ணி சுதாவிடம் வந்து சொல்றான்.. அண்ணி இந்த அளவுக்கு அந்த மல்லிகா ஆட்டம் காண்பிக்கிறாள்னா ஏதோ ஒரு விஷயத்தில் நாம அவள்கிட்டே லாக்காகி இருக்கோம் அண்ணின்னு…நல்ல கண்டுபிடிப்புடா மகேஷ்…!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv serial azhagu sudha poorna mallika

Next Story
மெழுகு சிலையாய் ஜொலிக்கும் அஞ்சனாவின் ”க்யூட்” புகைப்படங்கள்… என்ன ஒரு கிரேஸ்!VJ Anjana, VJ Anjana latest photos, VJ Anjana latest shows, VJ Anjana latest photoshoots
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com