Advertisment

கலக்கும் காதல் தம்பதி: சன் டிவிக்கு வெளியே கால் பதிக்கும் கவின்- வெண்பா காம்பினேஷன்

Sun TV serial Nandan and Preethi jodi join new serial on Gemini TV: சித்தி 2 சீரியல் கவின் - வெண்பா ஜோடி ஜெமினி டிவி சீரியலிலும் களமிறங்கிறது; சந்தோஷத்தில் நந்தன் - ப்ரீத்தி ரசிகர்கள்

author-image
WebDesk
New Update
கலக்கும் காதல் தம்பதி: சன் டிவிக்கு வெளியே கால் பதிக்கும் கவின்- வெண்பா காம்பினேஷன்

சன் டிவி சீரியல் மூலமாக ரசிகர்களை கவர்ந்த காதல் ஜோடி, மற்றொரு புதிய சீரியலிலும் இணைந்து நடிக்கின்றனர்.

Advertisment

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளான ப்ரீத்தி ஷர்மா மற்றும் நந்தன் ஜோடி ஜெமினி டிவியில் ஒரு சீரியலில் இணைந்து நடிக்கின்றனர். சன் டிவியில் ராதிகா நடிப்பில் ஒளிப்பராகும் சித்தி 2 சீரியலில் இவர்களின் காம்பினேஷன் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த ஜோடி, மீண்டும் ஒரு சீரியலில் இணைந்து நடித்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

சீரியல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கும் ஜோடிகளில் சித்தி 2 சீரியல் நடிக்கும் கவின் – வெண்பா ஜோடியும் ஒன்று. கவினாக நந்தனும் வெண்பாவாக ப்ரீத்தி ஷர்மாவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தற்போது, ஜெமினி டிவியில் ஒளிப்பரப்பாகும் காவியாஞ்சலி என்ற சீரியலில் இணைந்து நடித்து வருகின்றனர். இதைக் கேள்விபட்ட இவர்களது ரசிகர்கள், தினமும் இரவு சீரியல் ஒளிப்பரப்பாகும் நேரத்திற்கு டிவி முன் ஆஜராகிவிடுகிறார்கள்.

publive-image

திருமணம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி ஷர்மா. தற்போது சித்தி 2 சீரியலில் வெண்பாவாக நடித்து வருகிறார். இதேபோல் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் மூலம் அறிமுகமான நந்தன், பின்னர் சித்தி 2 சீரியலில் கவினாக நடித்து வந்தார். சீரியலில் வெண்பா- கவின் ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களுக்கிடையே காதலால் ரசிகர்களை உருகவைத்தனர்.

ராதிகா, மெயின் கேரக்டரில் நடிக்கும் சித்தி 2 சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. கவின் – வெண்பா ஜோடிக்காகவே நிறைய பேர் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். இதேபோல் காவியாஞ்சலி சீரியலிலும் இவர்களது ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவியாஞ்சலி சீரியலுக்காக இவர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் நிறைய ஃபேன் பேஜ்கள் உண்டு. கவின் – வெண்பா, நந்தன் – ப்ரீத்தி போன்ற ஹேஷ்டேக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் தற்போது, வின் – வெண் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இருவரும் புது சீரியலில் கமிட் ஆகியுள்ளதால், சித்தி 2 சீரியலில் தொடர்ந்து நடிப்பார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Chithi 2 Serial Preethi Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment