”நிச்சயதார்த்தத்துடன் எல்லாம் முடிஞ்சிடுச்சு” - பிரேக் அப் சோகத்தில் ரோஜா...

'Roja' actress Priyanka : ’தவறு யார் மீது இருந்தாலும் மறந்துவிடுவோம், திரும்பி வா’ எனவும் ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரியங்கா. 

Sun TV Serial Roja : சீரியல் / சினிமா பிரபலங்கள் காதலில் விழுவதும், பின்னர் அந்த உறவு முறிவதும் சகஜமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இது இயல்பானது தான் என்றாலும், குறிப்பிட்ட அந்த பிரபலத்தின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலரோ நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த உறவை முறித்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் நிச்சயமான தனது காதலில் இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்கிறார் நடிகை பிரியங்கா. யாரிவர் என்கிறீர்களா? சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹீரோயின். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பிரியங்கா, அங்கே நாகர்ஜுனா, பத்மாபிரியா போன்றோருக்கு தங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு 15-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து முடித்து விட்டு, தமிழுக்கு வருகை புரிந்தார்.

தமிழில் அறிமுகமான முதல் சீரியலே பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. தான் காதலித்த ராகுலுக்கும் தனக்கும் கடந்த மே 10-ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதோடு, நிச்சயதார்த்ததிற்குப் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராகுல் ஹைதராபாத்திலிருந்து மலேசியா சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார். ’தவறு யார் மீது இருந்தாலும் மறந்துவிடுவோம், திரும்பி வா’ எனவும் ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரியங்கா.

இந்நிலையில், எவ்வளவோ முயன்றும் பிரியங்காவால், ராகுலை தொடர்புக் கொள்ள முடியவில்லையாம். ஒருமுறை கஷ்டப்பட்டு லைனைப் பிடித்துப் பேசியபோதும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம். ”இனி நான் என்ன செய்வது. நிச்சயதார்த்ததுடன் எல்லாம் முடிந்து விட்டது. இனி எங்களுக்குள் எதுவுமில்லை” எனத் தனது காதல் முறிந்ததை உறுதி செய்திருக்கிறார் பிரியங்கா.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close