scorecardresearch

சித்தி 2 மாற்றம்: நந்தன் டபுள் ஆக்ட்.. ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

chithi 2 serial update: சித்தி 2 புது எண்ட்ரியாக சீரியல் நாயகன் நந்தன் லோகநாதன் தான் இரட்டை வேடத்தில் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சித்தி 2 மாற்றம்: நந்தன் டபுள் ஆக்ட்.. ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

chithi 2 serial update: சன்தொலைக்காட்சியில் ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ள தொடர் சித்தி2. இந்த சீரியலில் பல கேரக்டர்கள் மாற்றப்பட்டாலும், ராதிகா விலகினாலும் அதே டிஆர்பியில் சென்றுக்கொண்டிருக்கிறது. கவின் வெண்பா இடையேயான ரொமான்ஸ், மற்றும் யாழினியின் வில்லத்தனம் என பரப்பாக கதை நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சன் டிவி தனது சமூக வலைதள பக்கத்தில் சித்தி 2 தொடரில் புதிதாக வரப்போகும் அந்த நபர் யார் என்ற கேள்வியுடன் பதிவிட்டிருந்தது. அந்த டிவிட்டர் பதிவின் பின் உள்ள நிழல் உருவம் கவின் போல் இருந்தது. புதிதாக வரப்போகும் நபர் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் அந்த புது எண்ட்ரி சீரியல் நாயகன் நந்தன் லோகநாதன் தான் இரட்டை வேடத்தில் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மல்லிகா வேண்டுமென்றே வெண்பாவின் சத்தியம் பற்றி கேட்க அந்த உண்மை கவினுக்கு தெரியவருகிறது. தொடர்ந்து வெண்பா ஏமாற்றிவிட்டதாக கூறி கவின் கடலில் தற்கொலை செய்துகொள்ள செல்வது போல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த சீனில் தான் அந்த இன்னொரு கேரக்டர் என்ட்ரீ கொடுக்கும் என தெரிகிறது. கவினை தடுக்க இன்னொரு கவின் வருவாரா அல்லது கவினின் தந்தை கேரக்டர் வருமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

வேறு சிலரோ கவின் இரட்டை வேடம் என்றால் சித்தி 2 க்கு bye bye தான் என கமெண்ட் போட்டு வருகின்றனர். இன்னொரு கவின் கேரக்டர யாழினியோட ஜோடிய பார்க்கமுடியாது என சித்தி2 சீரியஸ் பேன்ஸ்கள் புலம்பி வருகின்றனர்.ரசிகர்கள் பலரும் கவின் வெண்பா ஜோடி இணைந்திருக்க வேண்டும் என்றும் அவர்களை பிரிக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த இன்னொரு புதிய முகம் யார் என்பது இன்று அல்லது நாளைய எபிசோடுகளில் தெரியவரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Suntv serial chithi 2 new update kavin plays double role