Super star Rajinikanth starrer Darbar hits 7000 theaters : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படம் நாளை உலகெங்கும் வெளியாக உள்ளது. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் பரிசாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 200 கோடி லாபம் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எங்கெல்லாம் வெளியாக உள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
அனிருத் மீது நடவடிக்கை
700 திரைகளில் வெளியாகும் தர்பார்
இந்தியா முழுவதும் சுமார் 4000 திரைகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. வெளிநாடுகளில் 3000 திரைகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. பேட்டை படம் திரையிடப்பட்ட திரைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக திரைகளில் இந்த படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பாகுபலி 2 படம் 9 ஆயிரம் திரைகளில் திரையிடப்பட்டது. அதற்கடுத்து அதிக அளவு எதிர்பார்ப்பில் வெளியாக உள்ளது ரஜினியின் தர்பார்.
தர்பார் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான ஆர். கண்ணன் இது குறித்து கூறுகையில் “தமிழ் சினிமாவில் அதிக அளவு மார்கெட் பட்ஜெட்டினை கொண்ட திரைப்படம் தர்பார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும், ரஜினி காந்தின் கெரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக தர்பார் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரஜினி ரசிகர்கள் முதல்நாள் திரையரங்குகளை ஆக்கிரமிப்பார்கள், குடும்பங்கள் எல்லாம் வெள்ளி, சனி, ஞாயிறு என்று இந்த திரைப்படத்திற்கு திட்டமிடுவார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க :மரண மாஸ் கலெக்ஷன்: தர்பார் ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடியா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.