Advertisment

Rajinikanth Birthday Wishes: பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!

Happy Birthday Rajinikanth, Rajinikanth Birthday 2019 Updates: 44 வருடங்களாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்து வரும் இவர், இதுவரை 167 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth, darbar premiere show

ரஜினிகாந்த்

Rajinikanth Birthday Today Updates: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமா ரசிகர்களை தனது ஸ்டைலால் கவர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Advertisment

பெங்களூருவில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய இவர் 1975-ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் பாலச்சந்தரின் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தனது கலை பயனத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தில் ரஜினியின் அறிமுகமே ரஜினி ஒரு கேட்டை திறப்பது போல் இருக்கும். அப்போது திறந்த கதவு தான், அவரை இன்னும் இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறது. பெங்களூருவில் இருந்து சிவாஜி ராவாக தமிழ் நாட்டிற்கு வந்த அவரை ரஜினியாக மாற்றினார் இயக்குநர் பாலச்சந்தர். ஆரம்பத்தில் நடிகர் கமல் ஹாசன் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், பின்னர் ஹீரோவாக களம் இறங்கி, இன்று பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார். 44 வருடங்களாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்து வரும் இவர், இதுவரை 167 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 168-வது படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டிருக்கிறது.

Rajinikanth Birthday Wishes: Happy Birthday Superstar Rajinikanth Live Coverage

Live Blog

Superstar Rajinikanth Birthday Wishes

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் சம்பந்தமான செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.



























Highlights

    18:13 (IST)12 Dec 2019

    இயக்குநர் பிரியதர்ஷன் வாழ்த்து

    இயக்குநர் பிரியதர்ஷன் நடிகர் ரஜினிகாந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

    18:09 (IST)12 Dec 2019

    சென்னை சூப்பர் கிங்ஸ் - ரஜினி.. அடடா என்ன ஒற்றுமை

    சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், ரஜினிகாந்த்துக்கும் இடையேயான ஒற்றுமையைக் குறிப்பிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. 

    17:59 (IST)12 Dec 2019

    ஹெச்.ராஜா வாழ்த்து

    'மிகச்சிறந்த ஆன்மீகவாதியும் ஜனரட்ஷகமான சூப்பர்ஸ்டாருமான திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்' என பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார்

    17:37 (IST)12 Dec 2019

    இயக்குநர் பாலாஜி மோகனின் வாழ்த்து

    17:14 (IST)12 Dec 2019

    நடிகர் நிவின் பாலியின் வாழ்த்து

    16:50 (IST)12 Dec 2019

    'காத்திருக்கிறோம்’ என நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார்

    காமெடி நடிகர் சதீஷின் வாழ்த்து. 

    16:38 (IST)12 Dec 2019

    இந்திய சினிமாவின் பாட்ஷா

    இந்திய சினிமாவின் பாட்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்தியுள்ளார்

    16:32 (IST)12 Dec 2019

    சச்சினின் மாஸான வாழ்த்து

    உங்கள் ஸ்டைலும், ஆஃப்ஸ்கிரீன் பணிவும் உங்களை ஒவ்வொரு ‘தர்பாரிலும்’ ‘தலைவராக்கும்’  என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார். 

    16:22 (IST)12 Dec 2019

    நடிகை ஆர்த்தியின் வாழ்த்து

    எளிமையைக் கற்பிப்பவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 

    16:02 (IST)12 Dec 2019

    ரஜினிகாந்துக்கு தயாநிதி அழகிரி வாழ்த்து

    தயாநிதி அழகிரியின் வாழ்த்து. 

    15:29 (IST)12 Dec 2019

    ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்

    நடிகர் சந்திரன் நடிகர் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    15:17 (IST)12 Dec 2019

    த மேன் ஆஃப் ஸ்டைல் - சிம்ரன்

    பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த நடிகை சிம்ரன், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    14:59 (IST)12 Dec 2019

    முருகதாஸ் வாழ்த்து

    தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் வாழ்த்து. 

    14:33 (IST)12 Dec 2019

    தர்பாரின் புதிய போஸ்டரை வெளியிட்ட லைகா

    தர்பார் படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரஜினிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. 

    14:24 (IST)12 Dec 2019

    பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா - சுனில் ஷெட்டி

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா. தர்பார் படத்தில் உங்களுடன் பணியாற்றியது எனது கரியரின் மிகப் பெரிய உயரம் என நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார். 

    13:57 (IST)12 Dec 2019

    ரஜியை வாழ்த்திய கமல்

    நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது 44 ஆண்டு திரையுலக நண்பர் நடிகர் கமல் ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    13:06 (IST)12 Dec 2019

    மாமனாரை வாழ்த்திய மாப்பிள்ளை

    'ஹேப்பி பர்த் டே தலைவா’ என நடிகரும், ரஜினியின் மூத்த மருமகனுமான தனுஷ் தெரிவித்துள்ளார். 

    12:51 (IST)12 Dec 2019

    ரெய்னா வாழ்த்து

    நீங்கள் எப்போதும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 

    12:35 (IST)12 Dec 2019

    நீங்களே தான் பொறந்து வரணும் - விக்னேஷ் சிவன்

    இந்த கிரகத்தில் உங்களைப் போல் மற்றொரு நபர் இருக்க முடியாது! நீங்களே தான் பொறந்து வரணும்” என இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். 

    12:20 (IST)12 Dec 2019

    இனிய நண்பருக்கு வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்

    நல்ல உடல்  மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ ரஜினியை வாழ்த்தி மகிழ்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    12:12 (IST)12 Dec 2019

    அனிருத் வாழ்த்து

    இந்த உலகத்திலேயே நான் அதிகம் நேசிப்பவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். 

    12:00 (IST)12 Dec 2019

    வாழ்த்துகள் தலைவா

    நடிகர் ரஜினிகாந்துக்கு பிக்பாஸ் டைட்டிலை வென்ற முகென் ராவ், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    11:42 (IST)12 Dec 2019

    40 வருடமாக ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர்

    70, 80, 90, 2000 என கடந்த 40 வருடங்களில் பிறந்த அனைவருமே ரஜினியின் ரசிகர்கள்

    11:26 (IST)12 Dec 2019

    லதா ரஜினிகாந்த் வாழ்த்து

    எனது வாழ்க்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என லதா ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

    11:10 (IST)12 Dec 2019

    உங்களை சந்த்தித்துப் பேச காத்திருக்கிறேன்

    குழந்தை பருவத்திலிருந்தே உங்களை ரசித்து, உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்ட மில்லியன் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி. ஒரு முறை உங்களை சந்தித்து பேச காத்திருக்கிறேன் என்று நடிகை பார்வதி நாயர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

    10:59 (IST)12 Dec 2019

    தலைவர் 168 படக்குழுவினர் கொண்டாட்டம்

    நேற்று தலைவர் 168 படத்துக்கு பூஜை போடப்பட்டது. ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதோடு ரஜினிகாந்தின் பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள் படக்குழுவினர். 

    10:56 (IST)12 Dec 2019

    இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர்

    இந்திய சினிமாவின் பெருமைக்குரியவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் ஹேண்டிலில் பதிவிட்டுள்ளது. 

    10:51 (IST)12 Dec 2019

    இந்திய அளவில் முதலிடத்தில் ரஜினி பிறந்தநாள்

    ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில், #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. 

    ரஜினிகாந்த தற்போது நடித்து முடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து தனது 168-வது படத்திற்காக இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார். இதற்கிடையே தனது நட்சத்திர பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடன் சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடினார் ரஜினிகாந்த். மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் செளந்தர்யா, மருமகன் தனுஷ், பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்கா, வேத், மைத்துனர் ரவிச்சந்தர் உள்ளிட்ட ரஜினியின் குடும்பத்தினர் அந்த பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு, ரஜினி ஆரோக்கியத்துடன் வாழ சிறப்புப் பூஜை செய்தனர்.
    Rajinikanth
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment