Advertisment

மாஸான தருணம்: ’லம்போகினி’ காரை ஹாயாக ஓட்டிச் சென்ற ரஜினி!

கொரோனா அச்சம் காரணமாக, ஓட்டுநர் இல்லாமல் தன்னுடைய காரை, தானே ஓட்டி சென்று வந்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Lamborgini Drive in Chennai, Rajinikanth not wearing seat belt, traffic police fined rajinikanth

ரஜினி காந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ’அண்ணாத்த’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மற்றவர்களைப் போல் வீட்டில் இருந்து தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது (Lambhorgini) லம்போகினி காரை ஓட்டிக் கொண்டு வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி தனது காரை ஒட்டுகிறார் ரஜினி. நீண்ட நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய காரில் வெளியே சென்று வந்திருப்பது இதன் மூலம் தெரிகிறது. கொரோனா அச்சம் காரணமாக, ஓட்டுநர் இல்லாமல் தன்னுடைய காரை, தானே ஓட்டி சென்று வந்திருக்கிறார்.

இந்தப் படம் தற்போது ரஜினி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதனை ரஜினிகாந்த் மற்றும் லம்போகினி என்ற ஹேஷ்டேகில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

 

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment