Advertisment

கேரள ரசிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட சூர்யா - வீடியோ

படத்தை புரமோஷன் செய்வதற்காக கேரளா சென்றுள்ள சூர்யா, அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
sodakku mela, suriya, vignesh sivan

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற 12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Advertisment

‘கேங்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் இந்தப் படம், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தை புரமோஷன் செய்வதற்காக கேரளா சென்றுள்ள சூர்யா, அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

January 2018

Tamil Cinema Actor Suriya Thaanaa Serndha Koottam Sodakku Mela Sodakku
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment