நாளை மாலை வெளியாகிறது ஜோதிகாவின் ‘நாச்சியார்’ டீஸர்

‘நாச்சியார்’ படத்தின் டீஸர், நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. சூர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த டீஸரை வெளியிடுகிறார்.

ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸர் நாளை மாலை வெளியாகிறது.

திருமணத்துக்குப் பின் நடிக்காமல் இருந்த ஜோதிகா, இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குப் போக ஆரம்பித்த பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். ரீஎன்ட்ரியான ‘36 வயதினிலே’ வெற்றிப் படமாக அமைந்ததால், தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இரண்டாவதாக பிரம்மா நடிப்பில் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்தார்.

அடுத்ததாக, பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக, ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே முடித்துவிட்டார் என்பது ஆச்சரியம்.

‘நாச்சியார்’ படத்தின் டீஸர், நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. சூர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த டீஸரை வெளியிடுகிறார்.

×Close
×Close