scorecardresearch

சூப்பர்ஹிட் தமிழ் சீரியல் ரீமேக்கிலும் முத்திரை பதித்த சுஷாந்த் சிங் ராஜ்புட்

Sushant Singh Rajput : இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரான திருமதி செல்வம் தொடரின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Sushant Singh Rajput, Ekta Kapoor, suicide, tamil serial, tirumati selvum, dhoni untold story, bollywood, shock, depression
Sushant Singh Rajput, Ekta Kapoor, suicide, tamil serial, tirumati selvum, dhoni untold story, bollywood, shock, depression

திருமதி செல்வம் என்ற சூப்பர்ஹிட் தமிழ் சீரியலின் ரீமேக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை, திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோனி படத்தின் மூலமாக நாடு முழுவதும் பிரபலமான நடிகராக மாறிய இவர் இப்படி செய்துகொள்ள காரணம் என்ன என்று தெரியாமல் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான பின்னரே சுஷாந்த் சினிமாவுக்குள் நுழைந்தார்.அப்படி மக்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கிய ஒரு தொடர் பவித்ரா ரிஷ்டா.இந்த தொடர் சுஷாந்திற்கு முதல் வெற்றியாக அமைந்தது.

இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரான திருமதி செல்வம் தொடரின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ஜூன் 2ம் தேதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, திருமதி செல்வம் சீரியலின் ரீமேக்கான பவித்ரா ரிஷ்டாவில், சுஷாந்தின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவரது நடிப்பை பார்த்து, மற்றுமொரு சீரியலின் முதன்மை கேரக்டரிலும் அவர் நடிக்க வேண்டுமென்று ஜீ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்படி தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி பலருக்கும் முன்னுதாரணமாக இருந்த சுஷாந்த் திடீரென்று தற்கொலை முடிவெடுக்க என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்களும்,குடும்பத்தினரும் வருத்தத்தில் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sushant singh rajput ekta kapoor suicide tamil serial tirumati selvum dhoni untold story

Best of Express