பாலிவுட் படத்தில் சிட்னி ஸ்வீனி நடிக்க ரூ. 530 கோடி சம்பளம்... பாவம் அவரே ஷாக் ஆயிட்டாரு!

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, இந்தியப் படத்தில் நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க, அவருக்கு ரூ. 530 கோடிக்கும் மேல் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, இந்தியப் படத்தில் நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க, அவருக்கு ரூ. 530 கோடிக்கும் மேல் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
sydney sweeden

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, இந்திய திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக பரபரப்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க, அவருக்கு ரூ.530 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

சிட்னி ஸ்வீனி, 'யூஃபோரியா' (Euphoria) மற்றும் 'தி ஒயிட் லோட்டஸ்' (The White Lotus) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். அவரது அடுத்த படம் 'கிறிஸ்டி' (Christy), ஒரு பெண் குத்துச்சண்டை வீராங்கனையைப் பற்றியது. இப்படம் நவம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், அவர் 'அமெரிக்கன் ஈகிள்' ஜீன்ஸ் பிராண்டின் விளம்பரத் தூதராகவும் மாறியுள்ளார்.

தி சன் நாளிதழில் வெளியான ஒரு செய்தியின்படி, ஒரு இந்திய தயாரிப்பு நிறுவனம் சிட்னி ஸ்வீனியை அணுகி, ரூ.415 கோடி சம்பளமாகவும், விளம்பர ஒப்பந்தங்களுக்காக ரூ.115 கோடி எனவும் மொத்தம் 45 மில்லியன் பவுண்டுகள் (ரூ.530 கோடிக்கும் மேல்) வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறது. ஹாலிவுட் நடிகையின் பிரபலம், படத்தை உலக அளவில் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையில் இந்த ஒப்பந்தம் பேசப்பட்டதாக அச்செய்தி கூறுகிறது.

இந்தத் திரைப்படத்தில், சிட்னி ஒரு இளம் அமெரிக்க நட்சத்திரமாக நடிக்கிறார். அவர் ஒரு இந்திய பிரபலத்துடன் காதலில் விழுவதுதான் கதை. 2026-ன் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், நியூயார்க், பாரிஸ், லண்டன், துபாய் போன்ற பல்வேறு நகரங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Advertisment
Advertisements

இதுகுறித்து சிட்னியின் நெருங்கிய வட்டாரங்கள், “இந்த வாய்ப்பைக் கேட்டு சிட்னி முதலில் அதிர்ச்சியடைந்தார். 45 மில்லியன் பவுண்டுகள் என்பது மிகப்பெரிய தொகை. ஆனால், இந்த திட்டம் சுவாரஸ்யமாக உள்ளது. இது அவரை உலக அளவில் மேலும் பிரபலமாக்கும். இந்தியத் திரையுலகம் மிகவும் சக்தி வாய்ந்தது, வளர்ந்து வருகிறது. இந்தப் படம் இந்தியத் திரைப்படங்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளன.

“இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது ஒரு பெரிய வாய்ப்பு. சிட்னி கவனமாக யோசித்து வருகிறார். பணம் மட்டும் முக்கியம் அல்ல, அவருக்குப் பல படங்கள் வரிசையில் உள்ளன. ஆனால், இது ஒரு நடிகையாக அவரை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும்" என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்த செய்தி குறித்து சிட்னியின் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: