தனக்குத் தானே பென்ஸ் கார் பரிசளித்துக் கொண்ட டாப்சி!

நடிகை டாப்சி மெர்சிடிஸ் – பென்ஸ் கார் ஒன்றை தனக்குத் தானே பரிசளித்து இருக்கிறார்

தமிழில் ஆடுகளம், ஆரம்பம், முனி-3 படங்களில் நடித்த நடிகை டாப்சி தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ஜுத்வா-2 படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், மெர்சிடிஸ் – பென்ஸ் கார் ஒன்றை தனக்குத் தானே பரிசளித்து இருக்கிறார் டாப்சி. அதற்கு ‘மார்கரெட்’ என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எங்கள் குடும்பத்தில் புதிய நபரை வரவேற்கிறேன். மார்கரெட் நீ ரொம்ப அழகு! #GiftYourself #BlueEyedBeauty” என்று பதிவிட்டுள்ளார். இந்தக் காரில் டெல்லி ஷோரூமின் விலை ரூ.64.06 – 74.58 லட்சமாகும்.

முன்னதாக, பாலிவுட்டில் பேபி, பிங்க் மற்றும் நாம் ஷபனா ஆகிய படங்களில் நடித்து டாப்சி பிரபலம் ஆகியிருந்தார். ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா(ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் டாப்சி செயல்பட்டு வருகிறார்.

அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் போன்ற பெரிய நடிகர்களுடனும், நீரஜ் பாண்டே, அனிருதா ராய் சௌத்ரி போன்ற முன்னணி இயக்குனர்களுடனும் வேலை செய்து டாப்சி தனது திறமையை நிரூபித்துள்ளார். ஜுத்வா 2 படத்தில் வருண் தவான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து டாப்சி நடித்திருந்தார்.

டாப்சி வாங்கியிருக்கும் மெர்சிடிஸ் – பென்ஸ் எஸ்யூவி கார் ஒரு பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு டீசல் என்ஜின் வசதி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Taapsee pannu of judwaa 2 gifts herself a mercedes benz gle suv and this is what shes named it

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express