Vanitha Power Star Marriage Photo Viral : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. கடந்த 1995-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர், ஒரு கடத்தில் சினிமாவில் இருந்து விலகினார். தொடர்ச்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று பிரபலமானார்.
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள அவர், அனல்காற்று, அந்தகன், 2கே அழகானது காதல், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன் உள்ளிட்ட பல படங்களை கைவம் வைத்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சமூகவலைதள பக்கத்தில், நடிகர் பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் பெரும் வைரலாக பரவிய நிலையில், வனிதா 4-வது திருமணம் செய்துகொண்டாரா என்று கமெண்ட் பதிவிட்டு வந்தனர். மேலும் பவர்ஸ்டாரும் தனது சமூகலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
நடிகை வனிதா பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த திரைப்படம் தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை வனிதா இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை. நிச்சயமாக சாமியார் ஆக மாட்டேன். ஜோசியர் சொல்லியிருக்கிறார். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று பதில் கூறியுள்ள அவர் 4 அல்ல 40 கல்யாணம் கூட பண்ணவேன் என்று அதிரடியான பதிலை கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருமண கோலத்தில் உள்ள புகைப்படம் குறித்து விளக்கம் அளித்த பவர்ஸ்டார், சீனிவாசன், சம்பளமே வாங்காமல் இதில் நடித்து வருகிறேன். எனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதும் ஆண்டவன் கையில்தான் உள்ளது. நடிகர் - நடிகை என்ற முறையில் தான் அந்த புகைப்படம் வெளியிடப்பட்டது இதற்காக பலரும் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். அவர்களின் வாழ்த்து உண்மையானால், அது மகிழ்ச்சியே. எனது லத்திகா படம் 350 நாட்கள் ஓடியது. அதுபோல், இந்த படத்தையும் 300 நாள் ஓடவைப்போம் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil