Advertisment

சூடான காபி... குளிர் காற்று... நடிகர் சத்யராஜின் குன்னூர் பங்களா பற்றி தெரியுமா?

திவ்யா திரைத்துறையின் நிழல் படாமல் உணவின் பக்கம் தனது கவனத்தை திருப்பி தனது கெரியரை மாற்றிக்கொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
சூடான காபி... குளிர் காற்று...  நடிகர் சத்யராஜின் குன்னூர் பங்களா பற்றி தெரியுமா?

தமிழ் சினிமாவில் நகக்ல் நையாண்டியுடன் ரசிகர்களை குஷிப்படுத்தும் முக்கிய நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கோயம்புத்தூரில் பிறந்த இவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர். சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார்.

Advertisment

தொடர்ந்து தனது திறமையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொண்டுத்த சத்யராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கேரக்ரில் நடித்ததன் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் இயக்குநர் என பன்முக திறமை கொண்ட சத்யராஜ் தனது 100-வது படமான வில்லாதி வில்லன் படத்தை தானே இயக்கி  வேடங்களில் நடித்திருந்தார்.

தற்போது அப்பா மற்றும் குணச்சித்திர வேடங்கில் நடித்து வரும் சத்யராஜ் நடிப்பில் கடந்த வாரம் வீட்ல விஷேஷம் என்ற படம் வெளியானது. தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன், பிரின்ஸ் படத்தில் நடித் வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

மகேஷ்வரி என்பரை திருமணம் செய்துகொண்ட சத்யராஜ்க்கு சிபி. திவ்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் சிபி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக உள்ளார். ஆனால் திவ்யா திரைத்துறையின் நிழல் படாமல் தனது உணவின் பக்கம் தனது கவனத்தை திருப்பி தனது கெரியரை மாற்றிக்கொண்டுள்ளார்.

தனது அப்பாவை போல் நாத்திகவாதியான திவ்யா சத்யராஜ், இந்தியாவில் ல் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவராக உள்ளார். மேலும்  நியூட்ரிஷன் துறையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ள திவ்யா, சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார்.

மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா சத்யராஜ், அவ்வப்போது சில முக்கயமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் குன்னூரில் வாங்கியுள்ள பங்களா வீடு தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த பதிவில்,

சூடான நிலை, சூடான ஆடைகள், சூடான காபி, குளிர் காற்று, நீண்ட காலணி, காட்டு வாழ்க்கை, வேடிக்கை, சைக்கிள் ஓட்டுதல், பைக் சவாரி, குதிரை சவாரி, ஜீப் சவாரி, சிவப்பு ஒயின், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, விடுமுறை மற்றும் அளவற்ற உற்சாகம் இவை சில விஷயங்கள் எஸ்டேட்டில் உள்ள எங்கள் குன்னூர் வீட்டை நினைக்கும் போது என் நினைவுக்கு வருகிறது... எனக்கு மிகவும் பிடித்த விடுமுறை இடம் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Sathyaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment