scorecardresearch

அஜித் ஹீரோயின்… 40 வயது நடிகை வீட்டில் விசேஷம்: கணவருடன் ரொமான்ஸ் படங்கள் ரிலீஸ்

எதிரி ஆட்டோகிராஃப் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் நடித்திருந்தார்.

Kanika

2002-ம் ஆண்டு தமிழில் வெளியான ஃபவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை கனிகா. தொடர்ந்து எதிரி ஆட்டோகிராஃப் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் நடித்திருந்தார். கடைசியான தமிழில் ஓ.கே.கண்மணி படத்தில் நடித்த கனிகா தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் தெலுங்கு கன்னடம் என ஒரு சில மொழிகளில் நடித்துள்ள கனிகா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் தற்போது சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் மருமகள் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவரது கேரக்டருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இதனிடையே கடந்த 2008-ம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பரை திருமணம் கனிகா திருமணம் செய்துகொண்டார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கனிகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த பதிவில், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷ்யாம்! என் வாழ்வின் புதிய காற்றின் சுவாசம் நீ. ஒரு அற்புதமான மகன், அன்பான நண்பன், அக்கறையுள்ள சகோதரன், அற்புதமான அப்பா மற்றும் புரிந்துகொள்ளும் கணவனாக இருந்து, அந்த ஆற்றல், அன்பு மற்றும் வெறித்தனம் அனைத்தையும் தந்து எனது வாழ்க்கையை முழுமையாக்கியதற்கு நன்றி உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். கடவுள் உங்களை நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அபரிமிதமான அன்புடன் ஆசீர்வதிப்பார்’ என்று பதிவு செய்துள்ளார்.

இதனுடன சேர்த்து அவர் வெளியிட்டுள்ள ரொமான்ஸ் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கனிகாவின் கணவர் ஷியாம் பிரபல நடிகை ஜெயஸ்ரீயின் சகோதரர். என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress kanika photo shoot with her husband viral on social media