Advertisment

உள்ளாடை விளம்பரத்தில் கே.எல் ராகுல்: நடிகை கஸ்தூரி கமெண்ட் சரியா?

Tamil Cinema Update : தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள கஸ்தூரி, தற்போது தமிழில் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’, ‘உன் காதல் இருந்தால்’ 'கருட சுத்ரு'.ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
உள்ளாடை விளம்பரத்தில் கே.எல் ராகுல்: நடிகை கஸ்தூரி கமெண்ட் சரியா?

Actress Kasturi React Cricketer K.L.Rahul Innerwear Advertisement : 80-90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருந்தவர் கஸ்தூரி. கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள கஸ்தூரி, தற்போது 'தமிழ்ப் படம்', 'ஏஏஏ' மற்றும் 'தமிழ்ப் படம் 2' ஆகிய படங்களின் மூலம் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

Advertisment

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள கஸ்தூரி,  தற்போது தமிழில் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’, ‘உன் காதல் இருந்தால்’ 'கருட சுத்ரு'.ஆகிய படங்களிலும்,  தெலுங்கில் 'சிம்பா', 'மிஸ்டர் கர்ப்பம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியி்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக அரசியல் கட்சியினரையும், தன்னுடன் நடித்த சக நடிகர்கள் தொடர்பான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகை கஸ்தூரி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை ப்ளேஅப் சுற்றுக்கு அழைத்து சென்ற கே.எல்.ராகுல் பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் நடித்த உள்ளாடை தொடர்பான விளம்பரத்தை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ள நடிகை கஸ்தூரி, கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும், "கோலாக்கள், சிப்ஸ் மற்றும் ஆன்லைன் கேம்கள் தொடர்பான விளம்பரங்களில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதே சமயம் பல இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடை பிராண்டு விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆனால் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டனர்.  ஆனால் தற்போது கே.எல்.ராகுலை குத்துச்சண்டை வீரர்களுக்கு டஃப் கொடுக்கும் ஒருவரைப்போல் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆண்கள் ஆடைகளை அலமாரியில் இருந்து வெளியே கொண்டுவரும் என்று நம்புகிறேன் என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Kl Rahul Kasturi Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment