தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி முதல்முறையாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். இந்த அக்கவுண்ட் தொடங்கிய சில மணி நேரங்களில் 1 லட்சம் ஃபாலோயர்களை பெற்றுள்ளது.
கேரளாவை பூர்வீகமான கொண்ட நடிகை ஷாலினி, மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1983-ம் ஆண்டு தமிழில் வெளியான ஆனந்த கும்மி என்ற படத்தின் மூலம் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.
1997-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனியாத்திபரவு என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்த ஷாலினி, அதே படத்தின் தமிழ் ரீமேக்கான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமிழிலும் நாயகியாக நடித்தார். தொடர்ந்து தமிழில் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைப்பாயுதே பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்தார்.
அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகர் அஜித் – ஷாலினி இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகியுள்ள ஷாலினி குடும்பத்துடன் வெளியில் செல்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும்.
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவராக அஜித், எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்தவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஏதேனும் முக்கிய அறிவிப்பு என்றால் கூட தனது பிஆர்ஓ மூலமாகவே வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே அஜித்தின் மனைவி ஷாலினி முதல் முறையாக இன்ஸ்டாகிரம் பக்கத்திற்கு வந்துள்ளார். ஷாலினிஅஜித்குமார்2022 என்ற தொடங்கப்பட்டுள்ள இந்த அக்கவுண்ட்டில் 2 போஸ்ட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அக்கவுண்ட் தொடங்கப்பட்ட சிலமணி நேரங்களில் 100-கே ஃபாலோயர்களை பெற்றுள்ளது. இது தனிப்பட்ட சாதனை என்று பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள அஜித் சமூக வலைதளங்களில் இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் ஷாலினியின் அக்கவுண்டடை பின்தொடர தொடங்கியுள்ளர். இந்த அக்கவுண்ட இன்னும் சரிபார்க்கப்படவில்லை.
இதில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு புகைப்படங்களும் அஜித் ஷாலினி இருவரும் ஒரு படத்தில் வெளிநாட்டு இடத்தில் மிகவும் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர். மற்றொன்றில், இந்த ஜோடி மிகவும் முறையான நிலையில் உள்ளனர். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒரு ரசிகர் "இன்ஸ்டாகிராம்/சமூக ஊடகத்திற்கு வரவேற்கிறோம்" என்று ஒரு இதய ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் "எவர்கிரீன் ஜோடி" என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "அழகு என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித் ஷாலினி ஜோடிக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஜித் நடிப்பில் தற்போது தயாராகி வரும் துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் கலவையாக விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil