Advertisment

மீண்டும் தாலி சர்ச்சையில் வனிதா : கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி

tamil Cinema Update : தாலியுடன் பதிவிட்ட புகைப்படம் குறித்து கேட்ட நெடடிசன் ஒருவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மீண்டும் தாலி சர்ச்சையில் வனிதா : கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி

Vanitha Vijayakumar Marriage Photo Issue : தமிழ் திரையுலகில் தற்போது வைரஸ் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார்.  விஜயுடன் சந்திரலேகா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவ இவர், அதன்பிறகு ஒருசில படங்கில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்காத இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே 2 திருமணங்கள் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ய வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின் 3-வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து அதிர வைத்தார். ஆனால் இந்த திருமணம் நடந்து ஓரிரு நாட்களிலேயே பீட்டர் பாலை பிரிந்த வனிதா தற்போது தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.  

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவர்ஸ்டார் சீனிவாசனுடன் இவர் மாலை மாற்றிக்கொள்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதா 4-வது திருமணம் செய்துகொண்டாரா என்ற கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வரும் படத்தின் ப்ரமோஷனுக்காக இப்படி செய்தார்கள் என்று கூறப்பட்டது.

அதன்பிறகு கொல்கத்தாவில் ஒருவருடன் வினிதாவுக்கு திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு வனிதா மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், வனிதா தற்போது புதிதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இது உங்கள் நான்காவது திருமணமா? என கேலி செய்த நிலையில், பலவிதமாக அவரை கலாய்த்து வருகின்றனர். இந்த விமர்சனங்களாலால் கடுப்பான வனிதா, ‘நான் 4 திருமணம் செய்து கொள்வேன் அல்லது 400 திருமணம் செய்து கொள்வேன், உங்களுக்கு என்ன?’ என பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment