Advertisment

அஜீத் மனைவி ஷாலினிக்கு வெல்கம் சொன்ன யாஷிகா: ஆனா இப்படி ஆகும்னு நினைக்கல!

Tamil Cinema Update : சமூக வலைதளங்களில் மீண்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள பதிவிடும் யாஷிகா, சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற வாயா சாமி பாடலுக்கு நடனமாடியிருந்தார்

author-image
WebDesk
New Update
அஜீத் மனைவி ஷாலினிக்கு வெல்கம் சொன்ன யாஷிகா: ஆனா இப்படி ஆகும்னு நினைக்கல!

தமிழில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த, தொடர்ந்து துருவங்கள் பதினாறு, மற்றும் கௌதம் கார்த்திக்கின் அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமாக இவர், அடுத்து ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மாலம் பிரபலமான இவர், படவாய்ப்புகள் பெரிதா அமையவில்லை.

Advertisment

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். மேலும் விஜய் டிவியின் சில  ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வரும் யாஷிகா சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் என்ட்ரி கொடுத்திருந்தார்.  

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் அதிகாலை நேரத்தில் சென்னை மாமல்லபுரம் சாலையில் சென்ற யாஷிகா திடீரென விபத்தில்சிக்கினார். இந்த விபத்தில் அவரது தோழி பலியான நிலையில் படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல்நிலை தேறியுள்ள அவர் ஆக்டீவாகி வருகிறார்.  

சமூக வலைதளங்களில் மீண்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள பதிவிடும் யாஷிகா, சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற வாயா சாமி பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில், முன்னணி நடிகரான அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் ட்விட்டரில் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டது. ஆனால் இது போலி அக்கவுண்ட் என்பது பலரும் அறிந்திருந்தனர்.

ஆனால் இது தெரியாத யாஷிகா வெல்கம் மேம் என்று கமெண்ட் செய்திருந்தார். உடனடியாக நடிகர் அஜித்தின் இது ஒரு போலி கணக்கு என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவை கலாய்த்து வருகின்றனர். மேலும் உடல்நிலை தேறிய அவர், வாயா சாமி பாடலுக்கு நடனமாடியதே கலாய்த்த ரசிகர்கள் தற்போது இந்த நிகழ்வை வைத்து மேலும் விமர்சனம் செய்து வருகினறனர். தற்போது அந்த போலி கணக்கு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shalini Yashika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment