Biggboss Season 5 Update In Tamil : விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 81 நாட்கள் கடந்துள்ள நிலையில், 18 போட்டியாகளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, வைல்டு கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகியோர் உள்ளே வந்துள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போ்ட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்துகொண்டிருக்கினறனர்.
வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் போட்டியாளர்களுக்கு குடும்பத்தினரின் வரவு புதிய உற்சாகத்தை ஏற்படத்தியுள்ளது. அந்த வகையில் அக்ஷரா மற்றும் ராஜூவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்றுவிட்ட நிலையில், தற்போது பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். இவர்களை பார்த்த பிரியங்கா மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான ப்ரமோவில், பிரியங்காவின் அம்மா நிரூப்பிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதை பார்த்த பிரியங்கா இவன்கூட தான்மா சண்டை என்று சொல்ல அவர்கள் நிரூப்பை அழைத்து கனிவாக பேசுகின்றனர். இந்த காட்சி 3வது ப்ரமோவில் இடம்பெற்றுள்ளது பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக அவங்க அம்மா பேசுவார் என்று பார்த்தால் ப்ரண்ஷிப் எல்லாம் வெளியில பார்த்துக்கலாம். உள்ளே எல்லாரும் போட்டி போட்டு விளையாடுங்க இதுவரை அப்படித்தான் விளையாடியுள்ளீர்ள் இனிமேலும் அதையே தொடருங்கள் என்று சொல்ல பிரியங்காவின் சகோதரரும் அதையே சொல்லிவிடுகிறார்.
பிரியங்காவின் அ்ம்மா பேசியதை கேட்டு பழசை மறந்த நிருப் பிரியங்காவிடம் மகிழ்ச்சியாக ப்ரண்டஸ் என்று கை கொடுக்கிறார். அனால் இதைபபற்றி எதும் பெரியதாக எடுத்துக்கொள்ளாதது போல் இருக்கும் பிரியங்கா கை கொடுத்துவட்டு செல்கிறார். இந்நிலையில் டிசம்பர் 22 பிறந்தநாள் கொண்டாடிய வருண் குடும்பம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ப்ரமோ வரவில்லை, என்றும் வைல்டு கார் என்ட்ரியாக வந்த சஞ்சீவ் அமீது மற்றும் தாமரை குடும்பத்தினர் எப்பொது பிக்பாஸ் வீட்டிற்கு வருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil