Advertisment

பிக்பாஸ் சீசன் 6 : 10 பெண் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

இந்த சீசனில் பத்து பெண் போட்டியாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களையும் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காடும்... காட்டு விலங்குகளும்... பிக்பாஸ் வீடு இதுதானா?  வைரல் புகைப்படங்கள்

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த 5 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் கடந்த சீசனில் கொரோனா தொற்றால் கமல்ஹாசன் பதிக்கப்பட்டிருந்தபோது ஒருவாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

publive-image

டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன். நிகழ்ச்சியின் கடைசியில் விக்ரம் பட ஷூட்டிங்கிற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியறினார் அதன்பிறகு நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்னிகினார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த 6-வது சீசனில் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாதவர்கள் கூட பங்கேற்ற சிறப்பு வாய்ப்பு விஜய் டிவி சார்பில் வழங்கப்பட்டது. இதனிடையே 'பிக் பாஸ் 6' நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்க உள்ளதாகவும், அதற்கான செட் வேலைகள் மற்றும் போட்டியாளர் தேர்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

publive-image

இந்த சீசனில் பத்து பெண் போட்டியாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களையும் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல இசையமைப்பாளர் டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் முதல் சுற்றில் கையெழுத்திட்ட போட்டியாளர்களில் ஒருவர் எனவும். நடிகையும் தொகுப்பாளருமான திவ்யதர்ஷினி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த பட்டியலில்,  பட்டியலில் உள்ள மற்றவர்கள் பிரபல தமிழ்/கன்னட நடிகைகள் மனிஷா யாதவ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத், 'பாரதி கண்ணம்மா' புகழ் ரோஷ்னி ஹரிப்ரியன், 'சூப்பர் சிங்கர்' புகழ் ராஜலட்சுமி செந்தில், குக் வித் கோமாளி புகழ் நடிகை தர்ஷா குப்தா, 'ராஜா ராணி' புகழ் நடிகை அர்ச்சனா, நடிகை ஸ்ரீநிதி மற்றும் விஜே அஞ்சனா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 2 ஆம் தேதி முதல் விஜய் டிவியில் 'பிக் பாஸ் 6' ஒளிபரப்பாக உள்ளதாகவும், இந்த பத்து பெண் போட்டியாளர்கள் பங்கேற்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment