Aishwarya Rajesh | Bigg boss season 6 tamil first time open nomination everybody got shocked : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தனது அண்ணன் முதல்முறையாக நாமினேஷன் ஆகியுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக அறிமுகதில்லாத பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக இந்த சீசன் முதல் நாளில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், மணிகண்ட ராஜேஷ் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். தமிழில் அட்டக்கத்தி, காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான இவர், சன்.டிவியின் அழகு சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 7 வாரங்களை கடந்துள்ள நிலையில், இதில் பங்கேற்ற ஜி.பி.முத்து சொந்த பிரச்சனை காரணமாக வெளியேறிவிட்ட நிலையில், மெட்டி ஒலி ஷாந்தி, ஷரினா, அசல் கோளார், மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். இதனிடையே அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் மணிகண்டன், கதிரவன், அமுதவாணன், ராம், ஆயிஷா, ராபர்ட், தனலட்சுமி உள்ளிட்டோர் நாமினேட் ஆகியுள்ளனர்
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்து முதல்முறையாக நாமிகேட் ஆகியுள்ள மணிகண்டனுக்கு, ஆதரவு அளிக்குமாறு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் அன்பையும் ஆதரவையும் எனறு சகோதரரருக்கு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஐஸ்வர்யா ராஜேஷ ட்ரோல் செய்து வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் நீயே போனாலும் சப்போர்ட் பண்ணமாட்டோம் இதுல உன் அண்ணன் வேற என்றும் மற்றொரு ரசிகர், எதுக்கு இந்த தேவையில்லாத ஆணி அவர் ஒழுங்கா இருந்தா அங்க இருக்க போறார் இல்லனா வர போறாரு அங்கருந்து மைனாக்கு சொம்புதான தூக்க போறாரு வரட்டும் விடுங்க என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil