பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் பாவனி ஜோடி காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும், இதற்கு பாவனி தரப்பில் இருந்து இருந்து பதில் வராத நிலையில், தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலை வெளிப்படுத்தியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Advertisment
விஜய் டிவியின் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதில் சமீபத்தில் நிறைவடைந்த சீசன் 5-ல் கவனம் ஈர்த்த ஜோடிதான் அமீர் பாவனி ஜோடி. ஏற்கனவே திருமணமாகி தனது கணவனை பறிகொடுத்த பாவனி தனது சோக கதையை பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் சொல்லும்போதே ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர்.
இவரின் வாழக்கை நிலையை தெரிந்துகொண்டு பிக்பாஸ் வீ்ட்டில் இருந்த பல போட்டியாளர்கள் அனுதாபத்தை காட்டிய நிலையில், வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீர் ஒரு படி மேலே சென்று பாவனியுடன் நெருக்கம் காண்பித்தார். அதுவரை ஏனோதானே என்று சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அமீர் வருகைக்கு பின் இளமை துள்ளளுடன் அரங்கேறியது.
இவர்களின் நெருக்கத்தை பார்த்த போட்டியாளர்களும் ரசிகர்களும் அமீர் பாவனி இருவரும் காதலிப்பதாக சொல்லிவந்தனர். அதற்கு ஏற்றார்போல் அவர்களும்நடந்து கொண்டனர். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் ஒன்றாக விளம்பரங்களில் நடிப்பது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது என இருந்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த வாரம் அமீர் பிறந்த நாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அமீருடன் கட்டிபிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பாவனி உன்னுடன் இருந்தால் வாழக்கை மகிழ்ச்சியாக இருக்கும் ஐ லவ் யூடா என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம் பாவனி தனது காதலை உறுதி செய்யதாக தகவல் வெளியானது.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பாவனியிடம் லப் ப்ரபோஸ் செய்துள்ளார். இதில் பேசியுள்ள அவர், நானும் பலமுறை எனது காதலை வெளிப்படுத்திவிட்டேன் உன்னிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இப்போவாது இதற்கு பதில் சொல்வாய் என்று நினைப்பதாக கூறி ரோஜா பூ கொடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஸ்டேஜ்க்கு வரும் குழந்தைகள் பலரும் பாவனிக்கு பூ கொடுக்க அவர் இன்ப அதிர்ச்சியில் உறைகிறார். அப்போது அமீர் மோதிரத்தை பாவனியிடம் கொடுக்கிறார். இதை பார்த்த நடுவர்கள் அனைவரும் வாங்கிடுங்க என்று சொல்ல பாவனி மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதில் ஒரு ரசிகர் பாவனியின் தயக்கம் புரிகின்றன.. இருந்தாலும் அமீர் நல்ல பையன் ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தால் ஏனோ தெரியவில்லை எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர், இத்தன சீசன்ல பிக்பாஸ்ல லவ் பன்னவங்க எல்லாருமே வெளிய வந்து அத அப்படியே விட்டுடாங்க ஆனால் அமிர் ஒருவரோட லவ் மட்டுதான் உண்மையானது போல என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் என்னயா இப்படி லவ் பண்ற உன்னோட அப்ரோஜ் வேற லெவல் என்று கூறியுள்ளார். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க ரொம்ப நல்லா இருப்பிங்க.. என்று கூறயுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil