Advertisment

பின் தொடர்ந்த மர்ம நபர்... வீடியோவுடன் புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்

Tamil Serial Update : பைக்கில் வந்த ஒரு நபர் என்னை பின்தொடர்ந்தார். நான் செல்லும் இடமெல்லாம் வந்து நோட்டம் பார்ப்பதுபோல் கவனித்துக்கொண்டிருந்தார்.

author-image
WebDesk
New Update
பின் தொடர்ந்த மர்ம நபர்... வீடியோவுடன் புகார் அளித்த பிக்பாஸ் பிரபலம்

Bigg Boss Vaishnavi Complaint Against her Following Mystery Man : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆர்ஜே வைஷ்ணவி தன்னை இருசக்கர வாகனத்தில் யாரோ பின்தொடர்வதாக ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக ஷோவான பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்று பிரபலமானவர் ஆர்ஜே வைஷ்ணவி. பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பல சர்ச்சைகளில் பெரிதாக பேசப்பட்ட இவர், பிக்பாஸ் வெளியேற்றத்திற்கு பின் தனது வழக்கமான பணிகளை கவனித்து வருகிறார். இடையில், சமூகவலைதாளங்ளில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வைஷ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சென்னை காவல்துறையை டேக் செய்துள்ள அவர், ஆன்லைன் மூலம் புகாரை பதிவு செய்துள்ளார்.  

அந்த பதிவில்,, 'நான் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் இன்று  என் நாயுடன் நடைபயணம் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பைக்கில் வந்த ஒரு நபர் என்னை பின்தொடர்ந்தார். நான் செல்லும் இடமெல்லாம் வந்து நோட்டம் பார்ப்பதுபோல் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது நான் போன் பேசுவது போல் அந்த நபரை வீடியோ எடுத்தள்ளேன்.

நான் வசிக்கும் இடம் அவருக்குத் தெரியக்கூடாது என்பதற்காக அதே சாலையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அந்த நபர் என்னைப் பின்தொடர்வார் என்று எனக்குத் தெரியும், அதனால் நான் காத்திருந்து அவரை வீடியோவில் எடுத்தேன், பின்னர் நான் வசிக்கும் இடத்தை அவர் பார்ப்பதற்கு முன்பாக நான் வீட்டிற்குள் சென்றுவிட்டேன்

இது போன்ற சம்பவம் எனக்கு நடப்பது இது முதல் முறையல்ல, ஆனால், என் சொந்த இடத்தை பற்றி கவலைப்படாமல், சென்னையின் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றான இங்கு என் நாயுடன் நான் வெளியே நடக்க முடியாது என்பதை அறிந்து நான் இன்னும் நடுங்கிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த புகார் தற்போது வைரலாகி வரும் நிலையில், தனது புகார்களை சென்னை கிரேட்டர் கார்ப்பரேஷன் போலீசில் பெற்றுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கிரேட்டர் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதற்கு பதில் அளித்துள்ளது. அதில் உங்களது புகார் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment