Advertisment

பாடல் மட்டுமல்ல... நடனமும் கைவந்த கலைதான்... ஆட்டத்தை தொடங்கிய பிக்பாஸ் இசைவாணி

Tamil Cinema Update : தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட அவர். மீண்டும்தனது திறமையை வெளிக்காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
பாடல் மட்டுமல்ல... நடனமும் கைவந்த கலைதான்... ஆட்டத்தை தொடங்கிய பிக்பாஸ் இசைவாணி

Bigg Boss Isaivaani Dance Viral : கானா பாடகியாக பலருக்கும் பரிட்சயமான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட்டிதொட்டி எங்கிலும் பிரபலமாகிவிட்டார். தற்போது பி்க்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள இவர், நிகழ்ச்சி ஒன்றில் பாடலுக்கு நடனமாடியுள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது. பாடுவார் என்று தெரியும. இவருக்கு நடனம் கூட வருமான என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகினறனர்.

Advertisment

பிக்பாஸ் என்று சொன்னவுடன் அங்கு நடக்கும் சண்டை சச்ரவுகள், பலருக்கும் அதிகம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ரசிகர்கள் மத்தயில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரபலமாக உள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5-மூலம் மேலும் பிரபலமடைந்துள்ளவர் இசைவாணி. இவர் பிக்பாஸ் நிகழச்சிக்கு வருவதற்கு முன்னாள் ஒரு கானா பாடகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

இவர் பிக்பாஸ் வீ்ட்டிற்கு வருகிறார் என்ற செய்தி கேட்டு பலரும், இனி பிக்பாஸ் வீட்டில் பாட்டுச்சத்தம் ஒளிக்கும் என்று ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். அதற்கு ஏற்றாற்போல், பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும்போதே தொகுப்பாளர் கமல்ஹாசன் கேட்க அங்கேயே ஒரு மோட்டிவேஷனல் பாட்டை பாடி அசத்தினார். இதை கேட்டு பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் இசைவாணி பிக்பாஸ் வீட்டில் தனது திறமையை வெளிக்காட்டுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தானர்.

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இசைவாணி பிக்பாஸ் வீட்டில் ஒரு பாடல் கூட பாடவில்லை.  தமிழ சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் வழிவந்தபாடகியாக இசைவாணி திரைப்படத்திலும் பாடல் பாடி வருகிறார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இவர் பாடல் பாடாதது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட அவர். மீண்டும்தனது திறமையை வெளிக்காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மார்கழி மாதம் நடத்தப்படும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் கானாப்பாடல்களை ஒளிக்க செய்ய வேண்டும் என்று பா.ரஞ்சித்தின் இசைக்குழுவில் இடம்பிடித்துள்ள இசைவாணி பாடல் பாடி அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியுள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள டூ..டூ...டூ என்ற அந்த பாடலுக்கு மின்விளக்கில் ஒளிரும உடையுடன் இசைவாணி நடனமாடும் வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பாடல் மட்டும் தான் நினைத்தோம் நடனம் கூடவா என்று ஆச்சரியமடைந்து வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment