பிக்பாஸ் பார்த்ததே இல்லை… அடித்து சொல்லும் அபிஷேக்… கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Tamil Reality Show : அபிஷேக்கிடம் கமல் நீங்கள் இதற்கு முன்பு பிக்பாஸ் பார்த்ததே இல்லையா என்று கேட்கிறார். அதற்கு அபிஷேக் இல்லை என்று ஆணித்தனமாக செல்கிறார்.

Biggboss Season 5 Show Update : பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சினிமா விமர்சகர் அபிஷேக், தான் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடு கூட பார்த்ததில்லை என்று தொகுப்பாளர் கமல்ஹாசனுடன் வாதாடியது குறித்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சின்னத்திரையின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக புதுமுகங்கள் பலர் பங்கேற்றுள்ள இந்த ஷோவில் சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜாவும் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து இவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் அபிஷேக் விரைவில் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வார இறுதிக்கான எபிசோட்டில், அபிஷேக்கிடம் கமல், நீங்கள் இதற்கு முன்பு பிக்பாஸ் பார்த்ததே இல்லையா என்று கேட்கிறார். அதற்கு அபிஷேக் இல்லை என்று ஆணித்தனமாக செல்கிறார். ஆனாலும் விடாத கமல் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்க, இறுதிவரை பிக்பாஸ் பார்த்தில்லை என்று சொல்லும் அபிஷேக், நீங்கள் வரும் ப்ரமோ வீடியோக்கள் மட்டுமே பார்த்ததாக சொல்கிறார். அதை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் பார்க்கவே இல்லை என சத்தியம் செய்கிறார் அபிஷேக்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக்,  ஊருக்கே தெரியும் உள்ளே கேமரா வச்சி ஷூட் பண்ணிட்டு இருக்காங்கடா.. இதுல காமெடி என்னன்னா? 100 நாள் ஷோவ நடத்தி ஒருத்தர் சிஎம் ஆகிடலாம்னு நினைச்சிட்டு இருக்காரு.. கேட்டா பிக் பாஸ்ன்னு சொல்றான் என பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கமல்ஹாசன் பற்றியும் அபிஷேக் விமர்சித்திருந்தார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உடனே இந்த வீடியோவை பதிவிட்டு நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

ஆனால் இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு இதற்கு முன்பு  பிக்பாஸ் பார்த்ததே இல்லை என்று கூறியுள்ள அபிஷேக் ராஜாவை நல்ல மீன்கள் விற்கப்படும் என்கிற வடிவேலு காமெடி மீம்ஸை போட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள காமெடி நடிகர் சதீஷ், ஏன்யா பிக் பாஸ் என்ன பார்ன் மூவியா? பார்த்தத பார்த்தேன்னு ஒத்துக்கோயேன்.. அதுக்கு ஏன் இவ்ளோ பர்பாமன்சு என ட்விட் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையான அபிஷேக்கை கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆபாச படத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள நடிகர் சதீஷ் சன்னி லியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தில் நடிப்பதால் இப்படி செய்துள்ளதாரா என்று நெட்டிசன்கள் கேட்டு வரும் நிலையில், ஒருவர் அவன் இனிமேல் பர்பாமன்சு பண்ணா என்ன? பண்ணலானா என்ன? இந்த வாரம் வீட்டுக்கு போயிடுவான் என்றும் நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவான்.. அவன்கிட்ட நேர்லயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க புரோ என்று ஒருவர் கூறியுள்ளார்.

இதில் நெட்டிசன் ஒருவர் ஊர்ல நிறைய பேரு இப்படிதான் சுத்திகிட்டு இருக்கானுங்க.. வீட்ல பாக்குறது, வெளில வந்து இப்படி பேசுறது என கூறியுள்ளார். மற்றொருவர் அவ்வளவு பேசி இருக்கான் நம்ம பையன்.அதான் வெச்சு செய்யுறாரு நம்ம உலக நாயகன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil biggboss season 5 reality show abhishek vs kamalhasan

Next Story
கமல்ஹாசனுக்கே கன்டென்ட் கொடுத்த அபிஷேக்… ஆனால், இனி பிக் பாஸ் கன்டென்ட்?Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Priyanka Akshara
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com