Biggboss 5 : ப்ரமோவில் ஆவேசம்… போட்டியாளர்களிடம் காண்பிப்பாரா கமல்… எதிர்பார்பில் பிக்பாஸ் ப்ரமோ

Tamil Realtity Show : பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Bggboss Promo Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நாள்தோறும் விறுவிறுப்பை ஏற்படுத்துவதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி இடம் உண்டு. இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. தற்போது 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக ஓரிரு நாட்களில் வெளியேறினார்.

இதனையடுத்து முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மலேசியாவில் இருந்து பங்கேற்ற நாடியா சங் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மெலோங்கியுள்ள நிலையில், 3-வது வாரத்திற்கான தொகுப்பாளர் கமல்ஹாசன் ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த பரமோவில், கடந்த வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் பற்றி கோபமாக பேசும் கமல்ஹாசன், “மாத்தி மாத்தி பேசி உள்ளே இருப்பவர்களை வேண்டுமானால் ஏமாற்றிவிடலாம். ஆனால் வாத்தியை ஏமாற்ற முடியாது. கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு. ஏன்னா அவங்க உடைச்ச ரூல்ஸ் ஏராளம். ஒவ்வொன்றாக கேட்டுவிடலாம் இன்னைக்கு ராத்திரி” என கோபத்துடன் கூறுகிறார்.

இதனால் இன்றைய கமல்ஹாசன் எபிசோட்டில் என்ன நடக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கமலஹாசன் கோபமாக பேசும்போது, பிக்பாஸ் வீட்டில், பலரும் அதிர்ச்சியடைகின்றனர். இதில் அபிஷேக் ராஜா, பிரியங்கா டீம் தான் அதிகமாக சிக்க வாய்ப்புள்ளது என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வரும் நிலையில், கமல் ப்ரோமோவில் மட்டும் தான் ஷோவில் அப்படியே தலைகீழ் எனவும் சிலர் விமர்சித்துள்ளனர். இதனால் இன்றைய எபிசோடு விறுவிறுப்பான இருக்குமா அல்லது வழக்கமான எபிசோடாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil biggboss season 5 weekend promo with kamal hassan

Next Story
Tamil Serial Rating : இனி வெண்பா ஆட்டம் க்ளோஸ்… சீரியல் டாப்… பரபரப்பாகும் பாரதி கண்ணம்மா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com