Advertisment

திடீரென திருமண கோலத்தில் பிக் பாஸ் வருண்- அக்ஷரா: வைரல் போட்டோஷூட்

வருண் அக்ஷரா இருவரும் திருமணக்கோலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
திடீரென திருமண கோலத்தில் பிக் பாஸ் வருண்- அக்ஷரா: வைரல் போட்டோஷூட்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியில் விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களில் வருண் மற்றும் அக்ஷாராவுக்கு தனி இடம் உண்டு.

Advertisment
Gallery
Gallery

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே இவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தது வைரலாக பரவியது. மேலும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் இது குறித்து இருவருமே வெளிப்படையாக பேசாத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும், வருண் அக்ஷரா இருவரும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர்.

Gallery

இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றித்திரியும் பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது இவர்கள் இருவரும் திருமணக்கோலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவர்கள் போட்டோஷூட் மூலம் காதலை வெளிப்படுத்தியுள்ளதாக கூறி வருகின்றனர்.

Gallery

ஆனால் இந்த போட்டோஷூட் ஒரு பிரபல மாத இதழுக்காக எடுக்கப்ட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளர். ஆனாலும் நெட்சன்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment