சின்னத்திரை ரசிகர்களை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்ள வந்துவிட்டது பிக்பாஸ் என்று சொல்லும் அளவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிக்பாஸ நிகழ்ச்சி முதல் நாளே களைக்கட்ட தொடங்கிவிட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பல அறிமுகமில்லாத சில போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளது. இதில் 11-வது போட்டியாளராக உள்ளே நுழைந்து முதல் நாளிலேயே கவனம் ஈர்த்துள்ளவர் ஜனனி.
இலங்கையை சேர்ந்த இவர் மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன் பலனாக இலங்கை சேனலில் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜனனி தற்போது நடிகை த்ரிஷாவின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் தான் என்ட்ரி ஆகும்போது அவர் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் கூறிய சம்பவம் வைரலானது.
தான் பள்ளியில் படிக்கும்போது பின்னாளில் என்னவாக போகிறீர்கள் என்று கேட்டபோது தான் த்ரிஷா மாதிரி ஆக வேண்டும் என்று அவர் கூறியதாக தெரிவித்தது கமலையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கு கமலும் த்ரிஷாவுக்கு போட்டியாக ஒருவர் வந்துவிட்டார் என்று கூறியிருந்தார். ஜனனி தனது இன்ட்ரோவில் இவ்வாறு பேசியதே அவருக்கு வைரலாக பரவியது.
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே ஜனனி அனைத்து போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனால் அடுத்தவாரம் நேரடி நாமினேஷனில் இடம்பெற உள்ளது ஒரு பக்கம் ஆச்சியமாக இருந்தாலும், ஒரே நாளில் அவருக்கான ஆர்மியும் உருவாகியுள்ளது இன்னொரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனனி நேரடி நாமினேஷனில் இடம்பெற்றாலும் நாங்கள் அவரை காப்பாற்றி இறுதியில் டைட்டில் வின்னராக கொண்டு செல்வோம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஜனனி ஆர்மியின் போஸ்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பிக்பாஸ் முதல் நாளிலேயே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“