Advertisment

நிக்கி- ஆதி மேரேஜ் போட்டோஸ்: நேரில் வாழ்த்திய பிரபலங்கள்

யாகாவராயினும் நாகாக்க படத்தில் நடித்தபோது நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிக்கி- ஆதி மேரேஜ் போட்டோஸ்: நேரில் வாழ்த்திய பிரபலங்கள்

தமிழில ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக டார்லிங் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து ஆதியுடன் மரகத நாணயம், யாகாவராயினும் நாகாக்க, விஷ்னு விஷாலுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விக்ரம் பிரபுவுடன் நெருப்புடா, பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisment
publive-image

இந்நிலையில் யாகாவராயினும் நாகாக்க படத்தில் நடித்தபோது நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. இது குறித்து இருவரும் வெளிப்படையாக எதுவும் சொல்லாத நிலையில், சமீபத்தில் ஆதியின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிக்கி கல்ராணி பங்கேற்றார். இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தனர்

publive-image
publive-image

தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆதியின் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி பங்கேற்றபோது இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்பட்டது.

publive-image
publive-image

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதி நிக்கி கல்ராணி இருவருக்கும் திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து இவர்கள் திருமணத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

publive-image

இந்நிலையில், ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. ஆர்யா - சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Nikki Galrani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment