Advertisment

விஜயுடன் இணைந்து நடிக்காதது ஏன்? அஜித் சொன்ன விளக்கம்

தனது அயராது உழைப்பினால் தற்போது தமிழ் சினிமாவில் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அஜித்

author-image
WebDesk
New Update
விஜயுடன் இணைந்து நடிக்காதது ஏன்? அஜித் சொன்ன விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தனது போட்டி நடிகரான விஜய், மற்றும் மல்டி ஸ்டார் படங்கள் குறித்து பேசிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்த நடிகர்களில் முக்கியமானவர் அஜித். 1990-ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற படத்தில் அறிமுகமான இவர் 1993-ம் ஆண்டு தமிழில் வெளியான அமராவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அஜித் தொடக்கத்தில் பல சறுக்களையும் சந்தித்துள்ளார்.

ஆனாலும் தனது அயராது உழைப்பினால் தற்போது தமிழ் சினிமாவில் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவருக்கும் நடிகர் விஜய்க்கும் சினிமாவில் போட்டிகள் உள்ளது. விஜய் சாதனையை அஜித் முறியடிப்பதும், அஜித் சாதனையை விஜய் முறியடிப்பதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல் இவர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும்போது அந்நாள் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும் பரபரப்பாக இயக்கி வரும் நிலையில், விஜய் குறித்து நடிகர் அஜித் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது

இந்த வீடியோவில் விஜய்க்கும் எனக்கும்போட்டி உள்ளது. எந்த பீல்டாக இருந்தாலும் போட்டி பொறாமை இருக்கதான் செய்யும். ஆனால் அது தனிப்பட்ட வாழக்கையை பாதிக்காமல் இருந்தால் ஆரோக்கியமானதுதான். எனக்கும் விஜய்க்கும் தனிப்பட்ட முறையில் எந்த போட்டியும் இல்லை நாங்கள் எதிரிகளும் இல்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல் மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பது குறித்து கேட்கிறார்கள். அப்படி நடிப்பது எனக்கு ஃகம்பர்ட்புளாக இல்லை. ஏன்னா இப்போ விஜய் படம் ஷூட்டிங் நடந்தா 1500 குடும்பத்தினருக்கு வேலை கிடைக்கும். அதேபோல் நான் விக்ரம் சூர்யா படங்கள் ஷூட்டிங் நடக்கும்போதும் 1500 குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும். நாங்கள் ஒன்றாக இணைந்து படம் பண்ணும்போது வேலை வாய்ப்பு குறைவும். ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள் என்றால் அதற்கான கதை அமைய வேண்டும்.

ஷோலே, ரஜினி கமல் இணைந்து நடித்த பல படங்கள் மாதியான கதைகள் அமைய வேண்டும். இணைந்து நடித்தே ஆக வேண்டும் என்று ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. இணைந்து நடிப்பதிலும் பெரிய ரிஸ்க் உள்ளது. இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும்போது சாங்ஸ் சரியாக அமையாது. ஒருவருக்கு நன்றாக இருந்து மற்றொருவருக்கு சரியில்லை என்றால் அவரது ஃபேன்ஸ் வருத்தப்படுவார்கள்.

நேருக்கு நேர் படத்தில் விஜய் நான் ஒன்றாக நடித்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக என்றால் அதை கம்ளீட் பண்ண முடியவில்லை. வித்தியாசமான கதைகளத்தில் நிறை படங்கள் பண்ணிருக்கேன் இதில் குறிப்பிட்டு படங்களை என்னால் சொல்ல முடியவில்லை. வாலி, வரலாறு, கிரீடம், முகவரி என சொல்லிக்கொண்டே போகலாம் என தெரிவித்துள்ளார்.

11 பாய்ஸ் குருப் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vijay Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment